Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் பாட்மிண்டன்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரருக்கு முதல் வெற்றி

London Olympics 2012
லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று ஆண்களுக்கான பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் காசப் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று பாட்மிண்டன் போட்டி தொடங்கியது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி கலந்து கொண்ட முதல் போட்டியில் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் காசப், பெய்ஜியன் வீரர் டான் யூஹனை எதிர்த்து ஆடினார். போட்டியின் துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர் காசப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

21 நிமிடங்கள் தொடர்ந்த முதல் ஆட்டத்தை காசப் 21-14 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். 2வது ஆட்டத்தில் அதிக உற்சாகத்துடன் ஆடிய காசப் 21-12 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார்.

இதன் மூலம் மொத்தம் 35 நிமிடங்கள் தொடர்ந்த இப்போட்டியில் 21-14, 21-12 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார். முதல் சுற்றில் இன்னொரு போட்டியில் கலந்து கொள்ள உள்ள கசாப் அதில் வெற்றி பெற்றால், அடுத்த சுற்றிற்கு தகுதி பெறுவார்.

Story first published: Saturday, July 28, 2012, 16:30 [IST]
Other articles published on Jul 28, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+