இந்தோனேசிய ஒபன் - சாய்னா சாதனையுடன் சாம்பியன்
ஜகார்த்தா: இந்திய பேட்மின்டன் நட்சத்திரம் சாய்னா நெஹ்வால், இந்தோனேசிய ஓபன் பட்டத்தை வென்று, சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
சீனாவைச் சேர்ந்த முன்னணி வீராங்கனை லின் வாங்கை வீழ்த்தி அருமையான வெற்றியைப் பெற்றுள்ளார் சாய்னா.
இன்று நடந்த இறுதிப் போட்டியில், சாய்னா, 12-21, 21-18, 21-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 49 நிமிடங்களில் இந்தப் போட்டி முடிவடைந்தது.
இதுவரை உலக அளவில் எந்த வீராங்கனையும் இவ்வளவு சிறப்பாக ஆடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சாய்னாவிடம் தோல்வியுற்ற வாங் உலக அளவில் 3வது ரேங்க்கில் இருப்பவர். சாய்னா 8வது ரேங்க்கில் இருக்கிறார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:27 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications