அம்மையிலிருந்து மீண்டு வந்த சாய்னா அசத்தல் வெற்றி

ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றுக்கு போட்டிக்கு இந்தியாவின் பருபள்ளி காஷ்யப்பும் தகுதி பெற்றுள்ளார்.
உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் தொடர் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் பருபள்ளி காஷ்யப், ஈரானின் அலி ஷா ஹீசைனியை எதிர்கொண்டார்.
இதில் சிறப்பாக விளையாடிய காஷ்யப் 21-9, 21-13 என்ற செட்களில் வென்றார். அவர் இரண்டாவது சுற்றில் சீனாவின் ஜின் சென்னை எதிர்கொள்கிறார்.
நேற்று நடந்த மற்றொரு முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் அரவிந்த் பட் அதிர்ச்சி தோல்வியடைந்தார். அவர் 14-21, 21-19, 22-24 என்ற செட்களில் சீன தைபெயை சேர்ந்த ஹிசின் ஹிசேவிடம் தோற்றார்.
சாய்னா அசத்தல் வெற்றி
பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சாய்னா, ரஷ்யாவின் அனஸ்டாசியா பிரகோபென்கோவை சந்தித்தார்.
சமீபத்தில் சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்ட அவர் முழுமையாக குணமடைந்து கடுமையாக பயிற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று அவர் நம்பிக்கையுடன் போட்டியை எதிர்கொண்டார். அம்மையிலிருந்து மீண்ட அந்த சோர்வே தெரியாத வகையில் படு சுறுசுறுப்பாக ஆடிய சாய்னா, அனஸ்டாசியாவை 21-10, 21-17 ஆகிய நேர் செட்களில் 27 நிமிடங்களிலேயே வீழ்த்தி அசத்தினார்.
நாளை நடைபெறும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் பல்கேரிய வீராங்கனை பெட்யா நெடல்சேவாவை சந்திக்கிறார் சாய்னா.
ஆடவர் இரட்டையர் போட்டியில் அக்ஷய் தேவல்கர் - ஜிஷ்னு சன்யால் ஜோடி 21-17, 13-21, 18-21 என்ற செட் கணக்கில் ரஷ்ய ஜோடியிடம் தோல்வியுற்றது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:29 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications