லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்தியாவின் சாய்னா நேவால், கஷ்யாப், ஜெய்பகவான், விஜிந்தர் சிங் ஆகியோர் களமிறங்க உள்ளனர்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பெரும்பாலான போட்டிகளில் 2வது சுற்று முடிந்து காலிறுதியை எட்டியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் இன்று துப்பாக்கி சுடுதல், பாட்மிண்டன், குத்துச்சண்டை ஆகிய போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

சுடுதல் சுடுதலில் ட்புள் டிராப் பிரிவில் இன்று நடைபெற உள்ள தகுதி போட்டியில் இந்தியாவின் ராஞ்சன் சோதி பங்கேற்க உள்ளார். இப்போட்டி மதியம் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் தகுதி பெறுபவர்கள் மாலை 7.30 மணிக்கு நடைபெற உள்ள இறுதி போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
அதேபோல 25 மீட்டர் ராப்ட் பயர் பிஸ்டல் பிரிவில் தகுதி சுற்றின் முதல் நிலையில் இந்தியாவின் விஜய் குமார் பங்கேற்க உள்ளார். இந்த போட்டி மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது.
குத்துச்சண்டை:
ஆண்களுக்கான லைட் வையிட் (60 கிலோ) பிரிவில் ரவுண்ட் 16 சுற்றில் மாலை 6.30 மணிக்கு இந்தியாவின் ஜெய் பகவான், கசகஸ்தான் வீரர் கனி சேய்லவ் உடன் மோத உள்ளார். அதேபோல நாளை அதிகாலை 2.30 மணிக்கு நடைபெற உள்ள மிடில் வையிட் (75 கிலோ) பிரிவின் ரவுண்ட் 16 சுற்றில் இந்தியாவின் விஜிந்தர் சிங், அமெரிக்காவின் டிரல் கெளஷா உடன் மோத உள்ளார்.
பாட்மிண்டன்:
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால், டென்மார்க்கின் டைன் பூன்னை சந்திக்க உள்ளார். அந்த போட்டி மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டியில் இந்தியாவின் பருப்பள்ளி காஷ்யப், மலேசியாவின் லி சோங் வை உடன் மோத உள்ளார். இந்த போட்டி இரவு 9.30 மணிக்கு நடைபெற உள்ளது.