உ.கோ.பாட்மின்டன்-காலிறுதியில் சாய்னா தோல்வி

உலக கோப்பை பாட்மின்டன் தொடர் ஹைதராபாத்தில் நடக்கிறது. இதில், நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் சாய்னா நேவால், உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை சீனாவின் லின் வாங்கை சந்தித்தார்.
சமீபத்தில் இந்தோனேசியாவில் நடந்த சூப்பர் சீரியல் தொடரில் வாங்கை, சாய்னா தோற்கடித்ததிருந்தால் நேற்றும் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சாய்னா முதல் ஆட்டத்தை 16-21 என இழந்தார். இதையடுத்து சுதாரித்து கொண்ட சாய்னா இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி பெற கடுமையாக போராடினார். ஆனால், அவரால் லின் வாங்கை தோற்கடிக்க முடியவில்லை. இறுதியில் சாய்னா 16-21, 19-21 என்ற ஆட்டக்கணக்கில் தோல்வியடைந்தார்.
ஜூவாலா ஜோடி ஏமாற்றம்...
நேற்று நடந்த கலப்பு இரட்டையர் இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் ஜூவாலா குட்டா, டிஜூ ஜோடி 16-21, 14-21 என இந்தோனேசியாவின் நோவா விடியான்டோ, லிலியானா நட்சிர் ஜோடியிடம் தோல்வியடைந்தது. இதையடுத்து உலக பாட்மின்டன் தொடரில் பங்கேற்ற இந்தியர்களும் வெளியேறிவிட்டனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:29 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications