ஒலிம்பிக் பாட்மின்டன்-காலிறுதிக்கு சாய்னா தகுதி, 2வது சுற்றில் அனூப்
{image-Saina Nehwal1250_11082008.jpg tamil.mykhel.com}பெய்ஜிங்: மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நெஹ்வால், ஹாங்காங்கின் சென் வாங்கை அபாரமாக தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.
பேட்மிண்டனில் தொடக்கத்திலிருந்தே சிறப்பாக விளையாடி வரும் சாய்னா இன்று ஹாங்காங் வீராங்கனையும், உலக அளவில் 5வது இடத்தில் இருப்பவருமான சென் வாங்கை காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சந்தித்தார்.
இதற்கு முன்பு இருவரும் இருமுறை மோதியுள்ளனர். இரண்டிலுமே வாங்தான் வென்றுள்ளார். எனவே இப்போட்டி கடுமையானதாக இருக்கும் என சாய்னா கூறியிருந்தார்.
அதற்கேற்ப முதல் செட்டில் இருவரும் போட்டி போட்டு புள்ளிகளைக் குவித்தனர். இருவரும் மாறி மாறி புள்ளிகள் எடுத்ததால் ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது. இருப்பினும் கடுமையாக முயன்றா 21-19 என்ற புள்ளிக்கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றினார் சாய்னா.
ஆனால் அடுத்த செட்டில் வாங்கின்கை ஓங்கியிருந்தது. மாறி மாறி வாங் புள்ளிகளைக் குவித்ததால் செட் 21-19 என்ற கணக்கில் வாங் வசமானது.
இதையடுத்து பரபரப்பான 3வது செட் ஆட்டத்தில் சாய்னா தனது முழுத் திறமையையும் காட்டி வாங்குக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். தொடக்கத்திலிருந்தே புள்ளிகளைக் குவித்ததால், வாங்கால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது.
இறுதியில், 21-11 என்ற கணக்கில் 3வது செட்டையும் கைப்பற்றி 21-19, 11-21, 21-11 என்ற கணக்கில் சாய்னா வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
இதன் மூலம் இந்தியாவுக்கு இன்னொரு பதக்கம் கிடைப்பதற்கான வாய்ப்பு சற்றே பிரகாசமாகியுள்ளது.
பிந்த்ரா மூலம் தங்கம் வென்ற இந்தியா, சாய்னா மூலம் காலிறுதிக்குள் நுழைந்து இன்றைய தினத்தை இந்தியாவுக்கு மறக்க முடியாத தினமாக மாற்றியிருக்கிறது.
2வது சுற்றில் அனூப் ஸ்ரீதர்:
பாட்மின்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல்சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் அனூப் ஸ்ரீததர் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
போர்ச்சுகல் வீரர் மார்கோ வாஸ்கோன்சாலஸை 21-16, 21-14 என்ற செட் கணக்கில் அவர் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றார். 2வது சுற்றில், ஜப்பானின் ஷோஜி சாடோவை அவர் சந்திக்கிறார்.
நீச்சல்: போன்சா முன்னேற்றம்
ஆடவர் நீச்சல் 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவின் தகுதிச் சுற்றுப் போட்டியில், இந்தியாவின் ரேஹான் ஜஹாங்கீர் போன்சா 2வது இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
குத்துச்சண்டையில் லக்ரா தோல்வி:
ஆடவர் பெதர்வெயிட் குத்துச்சண்டைப் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் பிமல் லக்ரா, உஸ்பெகிஸ்தான் வீரர் சுல்தானோவ் பஹதிர்ஜானை சந்தித்தார்.
ஆரம்பத்திலிருந்தே சுல்தானோவ் கையே ஓங்கியிருந்தது. அவரது குத்துக்களை சமாளிக்க முடியாமல் திணறினார் லக்ரா. பின்னர் சுதாரித்துக் கொண்டு திறமையை வெளிக்காட்டினார்.
இருப்பினும் 5-9 என்ற புள்ளிக் கணக்கில் லக்ரா தோல்வியைத் தழுவி வெளியேறினார்.

Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011

Click it and Unblock the Notifications