பேட்மின்டன் 10வது இடத்திற்கு முன்னேறி சாய்னா சாதனை
டெல்லி: உலக பேட்மின்டன் தர வரிசைப் பட்டியலில் 10வது இடத்திற்கு முன்னேறி இந்தியாவின் சாய்னா நேஹ்வால் புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்த ஆண்டு சாய்னாவுக்கு வெகு சிறப்பான ஆண்டு. ஒலிம்பிக் போட்டியில் அவர் காலிறுதி வரை முன்னேறி அசத்தினார். சைனீஸ் தைபே ஓபன் போட்டியில் அவர் வெற்றி பெற்றார். சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் போட்டியில் அரை இறுதி வரை முன்னேறினார். சைனா மாஸ்டர்ஸ் சூப்பர் சீரிஸ் போட்டியில் வெற்றி வாகை சூடினார்.
இந்த நிலையில் புதிய சாதனையாக உலக பேட்மின்டன் தர வரிசைப் பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார் சாய்னா.
இந்த சாதனையைப் படைத்த முதல் இந்திய வீராங்கனை சாய்னாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
18 வயதாகும் சாய்னா, இளைஞர் காமன்வெல்த் விளையாட்டு மற்றும் புனேவில் நடந்த உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியிலும் அவர் பட்டம் வென்றார் என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications