Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக்: பாட்மிண்டன், தடகளம், குத்துச்சண்டை போட்டிகளில் இன்று இந்தியா சாதிக்குமா?

Saina Nehwal
லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற உள்ள குத்துச்சண்டை, பாட்மிண்டன், தடகளம், துப்பாக்கி சுடுதல் ஆகிய போட்டிகளில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.

துப்பாக்கி சுடுதல்:

பெண்களுக்கான டிராப் போட்டியின் தகுதி சுற்று போட்டி மதியம் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் இந்தியாவின் ஷாகன் சவுத்ரி கலந்து கொள்ள உள்ளார். இதில் அவர் தகுதி பெறும் பட்சத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்க முடியும்.

பாட்மிண்டன்:

பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் பெறவதற்கான போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால், சீனாவின் வாங் ஜின் உடன் மோத உள்ளார். இந்த போட்டி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

குத்துச்சண்டை:

ஆண்களுக்கு லைட் பிளே வெயிட் பிரிவில்(49 கிலோ) காலிறுதிக்கு முந்தைய (ரவுண்ட் ஆப் 16) போட்டியில் இந்தியாவின் தேவேந்திரோ சிங், மங்கோலியாவின் செர்தம்பா புரேவ்டோர் உடன் மோத உள்ளார். இந்த போட்டி மாலை 6.45 மணிக்கு நடைபெற உள்ளது.

நாளை அதிகாலை 2 மணிக்கு நடைபெற உள்ள ஆண்களுக்கான லைட் வெல்டர் பிரிவின்(64 கிலோ) காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் இந்தியாவின் மனோஜ்குமார், இங்கிலாந்தின் தாமஸ் ஸ்டால்கர் உடன் மோத உள்ளார்.

தடகளம்:

பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் தகுதி சுற்று போட்டியில் இந்தியாவின் சுதா சிங் பங்கேற்க உள்ளார். இந்த போட்டி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

ஆண்களுக்கான 20 கி.மீ நடைபந்தயத்தின் இறுதி போட்டியில் இந்தியாவின் குர்மீத்சிங், பல்ஜிந்தர் சிங், இர்பான் கோலோத்தும் தோடி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இப்போட்டி இரவு 9.30 மணி நடைபெற உள்ளது.

Story first published: Saturday, August 4, 2012, 15:13 [IST]
Other articles published on Aug 4, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+