For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாய்லாந்து ஓபன் பட்டத்தை வென்றார் சாய்னா!

Saina nehwal
டெல்லி: இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்நா நேஹ்வால், தாய்லாந்து ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியை அவர் பெருத்த நம்பிக்கையுடன் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பாங்காக்கில் நடைபெற்ற தாய்லாந்து ஓபன் கிராண்ட்ப்ரீ போட்டியின் இறுதிப் போட்டியில், 22 வயதான சாய்னா, தாய்லாந்தின் ரட்சனோக் இந்தனோனை 19-21, 21-15, 21-10 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

இந்த ஆண்டில் சாய்னா பெறும் 2வது சாம்பியன் பட்டமாகும் இது. ஏற்கனவே மார்ச் மாதம் அவர் ஸ்வின் ஓபன் பட்டத்தை வென்றிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

அடுத்த மாதம் லண்டனில் தொடங்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு முன்பு சாய்னாவுக்கு 2வது சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது அவருக்கு பெரும் ஊக்கமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Story first published: Monday, June 11, 2012, 7:26 [IST]
Other articles published on Jun 11, 2012
English summary
Ace Indian shuttler Saina Nehwal got a shot in the arm ahead of next month's Olympics as she lifted the Thailand Open Grand Prix Gold title after rallying to beat Thailand's Ratchanok Inthanon in the final of the event in Bangkok on Sunday. The 22-year-old world number five Indian beat Inthanon 19-21 21-15 21-10 at the C U Sport Complex in Bangkok for her second title of the year after the Swiss Open win in March.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X