பாட்மின்டன் தரவரிசை - சாய்னாவுக்கு 7வது இடம்
டெல்லி: பாட்மின்டன் தரவரிசையில் இந்திய வீராங்கனை சாய்னா நெஹ்வால் விறுவிறுவென முன்னேறி 7வது இடத்தை பிடித்து சாதித்துள்ளார்.
இந்திய பாட்மின்டன் வீராங்கனை சாய்னா, கடந்தாண்டு நடந்த பீஜிங் ஒலிம்பிக்கில் காலிறுதி வரை முன்னேறி பதக்கத்தை நூலிழையில் தவறவிட்டார்.
சமீபத்தில் நடந்த சுதிர்மேன் கோப்பை தொடரில் சூப்பராக விளையாடினார். இத்தொடரில் விளையாடிய நான்கு போட்டிகளிலும் சாய்னா வெற்றி பெற்றார். இவரது அபார ஆட்டம் கைகொடுக்க இந்திய அணி இத்தொடரில் மூன்றாவது குரூப்பில் இருந்து முன்னேறி இரண்டாவது குரூப்புக்கு வந்துள்ளது.
இந் நிலையில் நேற்று புதிய பாட்மின்டன் தரவரிசை பட்டியில் வெளியிடப்பட்டது. இதில் 10வது இடத்தில் இருந்த சாய்னா 58,454 புள்ளிகள் பெற்று மூன்று இடங்கள் முன்னேறி 7வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனை ஆதிதி முடாத்கர் 35வது இடத்தில் இருக்கிறார்.
ஆண்கள் பிரிவில் சேத்தன் ஆனந்த் 12வது, அரவிந்த் பட் 24வது இடம்பெற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications