உ.கோ.பாட்மின்டன்-காலிறுதியில் செய்னா

உலக கோப்பை பாட்மின்டன் தொடர் ஹைதராபாத்தில் நடக்கிறது. இதில், நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் மூன்றாவது சுற்றுப்போட்டியில் இந்தியாவின் செய்னா நேவால், பல்கேரியாவின் பெடியா நெடல்சேவாவை எதிர்கொண்டார்.
இதில், கடுமையாக போராடிய போதும் செய்னாவால் முதல் ஆட்டத்தை கைப்பற்ற முடியவில்லை. இதை அவர் 18-21 என பறிகொடுத்தார்.
ஆனால், அடுத்து ஆட்டத்தில் மனம் தளராமல் போராடிய செய்னா, பல்கேரிய வீராங்கனைக்கு பதிலடி கொடுத்தார். அவர் இரண்டாவது ஆட்டத்தை 21-18 என வென்றார். மூன்றாவது ஆட்டத்திலும் சூப்பராக விளையாடிய அவர் அதை 21-10 என எளிதாக வென்றார்.
மொத்தம் 57 நிமிடங்கள் நடந்த இப்போட்டியில் செய்னா 18-21, 21-18, 21-10 என்ற ஆட்டக்கணக்கில் வென்று, காலிறுதிக்கு தகுதி பெற்றார். அவர் காலிறுதியில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான சீனாவின் லின் வாங்கை எதிர்கொள்கிறார். சமீபத்தில் நடந்த இந்தோனேசியன் சூப்பர் சீரியல் தொடரில் செய்னா, வாங்கை வீழ்த்தி பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:29 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications