சுவிஸ் ஓபன்: பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் சாய்னா நேவால் வெற்றி

சுவிட்சர்லாந்தில் உள்ள பாசெல் நகரில் சுவிஸ் ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் கோல்ட் பேட்மிண்டன் தொடர் நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால், சீனாவின் ஷிஸியன் வாங் ஆகியோர் மோதினர்.
உலக நம்பர் 1 வீராங்கனையான சீனாவின் ஷிஸியன் வாங் முதலில் இருந்தே வெற்றிக்காக கடுமையாக போராடினார். எனினும் முதல் செட்டை 21-19 என்ற கணக்கில் சாய்னா நேவால் கைப்பற்றினார். 2வது செட்டில் சிறப்பான விளையாடிய சாய்னா நேவால் 21-16 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றார்.
போட்டியின் இறுதியில் இந்தியாவின் சாய்னா நேவால் 21-19, 21-16 என்ற நேர் செட்களில் வெற்றிப் பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இது குறித்து சாய்னா நேவால் கூறியதாவது,
இறுதிப்போட்டிக்காக கடினமாக உழைத்து பயிற்சி மேற்கொண்டதன் மூலம் வெற்றிப் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. போட்டியின் போது அதிக தன்னம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் எளிதான வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றார்.
கடந்த ஆண்டு சுவிஸ் ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்ற சாய்னா நேவால், அதன்பிறகு 3 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்த ஆண்டு சாய்னா நேவால் மீண்டும் சுவிஸ் ஓபன் பட்டம் வென்றுள்ளார்.
நேற்றுமுன்தினம் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு தனது 22வது பிறந்த நாளை கொண்டிய சாய்னா நேவால், இந்த ஆண்டின் முதல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Story first published: Monday, March 19, 2012, 15:25 [IST]
Other articles published on Mar 19, 2012


Click it and Unblock the Notifications