சுவீஸ் ஓபன்: காலுறுதியில் நுழைந்தார் சாய்னா நேவல்

சுவிட்சர்லாந்தில் உள்ள பாசெலில் சுவிஸ் ஓபன் பாட்மின்டன் தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று நடைபெற்ற 2வது சுற்றில் இந்தியாவின் சாய்னா நேவல், நெதர்லாந்தின் ஜூடியாத் மியூலென்டிஜிக்ஸ் ஆகியோர் மோதினார்.
பரபரப்பான முதல் செட்டில் கடுமையாக போராடியும் சாய்னா 19-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். ஆனால் 2வது சுற்றில் சிறப்பான பதிலடி கொடுத்த சாய்னா 21-10 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றார். 3வது சுற்றிலும் சோர்ந்து போன ஜூடியாத் 21-6 என்ற கணக்கில் சாய்னாவிடம் தோற்றார்.
போட்டியின் முடிவில் இந்தியாவின் சாய்னா நேவல் 19-21, 21-10, 21-6 என்ற செட்களில் வெற்றிப் பெற்றார். இதன்மூலம் சுவிஸ் ஓபன் தொடரின் காலுறுதிப் போட்டியில் பங்கேற்க சாய்னா நோவல் தகுதிப் பெற்றார். காலுறுதிப் போட்டியில் உலக நம்பர் 12ம் வீராங்கனையான சீனாவின் சின்ப் லியூவை எதிர்த்து சாய்னா நேவல் விளையாட உள்ளார்.
Story first published: Saturday, March 17, 2012, 13:30 [IST]
Other articles published on Mar 17, 2012


Click it and Unblock the Notifications