Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலிய ஓபன்... சீனாவின் சென் லாங்கை வீழ்த்தி சாம்பியன் ஆனார் ஸ்ரீகாந்த்!

மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் சீன வீரர் சென்லாங்கை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாதனை படைத்தார் இந்திய வீரர் ஸ்ரீகாந்த்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆஸ்திரேலியன் சூப்பர் சீரிஸ் தொடர் நடைபெற்று வந்தது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் சீன வீரர் யுகி ஷி-யை 21-10 21-14 என்ற செட் கணக்கில் வீழ்த்திய கிடாம்பி ஸ்ரீகாந்த் இறுதி போட்டிக்கு 27 நிமிடங்களில் வெற்றி பெற்றார்.

Srikanth beats Chen Long 22-20 21-16 to win Australia Open Super Series

சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு ஸ்ரீகாந்த் தொடர்ந்து மூன்றாவது முறையாக தகுதி பெற்றார். இதற்கு முன்னதாக கடந்த வாரம் சிங்கப்பூர் ஓபன், இந்தோனேசியா ஒபன் இறுதிப் போட்டிகளில் ஸ்ரீகாந்த் விளையாடியிருக்கிறார். இதில் இந்தோனேசிய ஓபன் போட்டியில் மட்டும் சாம்பியன் பட்டம் வென்றார்.

சீனாவின் சென் லாங், கொரியாவின் லீ ஹுயுன் ஆகியோர் அரையிறுதியில் மோதினர். இவர்களில் சென் லாங் வெற்றி பெற்றார்.

இதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சீன வீரர் சென் லாங்கை 22-20, 21-16 என்ற நேர் செட் கணக்கில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் வீழ்த்தினார். முதல் சுற்றில் இருவரு்ம சரிசமமாக புள்ளிகள் எடுத்தனர். 5 முறை சென்லாங்கிடம் ஸ்ரீகாந்த் தோற்றிருந்த நிலையில் தற்போது வெற்றி பெற்றிருக்கிறார்.

Story first published: Sunday, June 25, 2017, 12:31 [IST]
Other articles published on Jun 25, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+