டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் சாம்பியன்
ஓடென்ஸ்: டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் தென்கொரிய வீரர் கியூனை வீழ்த்தி இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் பெற்றார்.
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் ஹாங்காங்கின் வாங்க் விங் கீ வின்சென்டை அரை இறுதிப் போட்டியில் எதிர்கொண்டார் ஸ்ரீகாந்த். இதில் 21-18, 21-17 என்ற நேர் செட்களில் வென்று ஸ்ரீகாந்த் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இன்று இறுதிப் போட்டியில் தென்கொரியாவின் லீ கியூனை ஸ்ரீகாந்த் எதிர்கொண்டார். இதில் 21-10; 21-5 என்ற எளிதான செட்களில் ஹியூனை ஸ்ரீகாந்த் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
ஏற்கனவே இந்தோனேசிய ஓபன் மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஸ்ரீகாந்த் ஹாட்ரிக் சாதனையாக டென்மார்க் பேட்மிண்டன் போட்டியிலும் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
Story first published: Sunday, October 22, 2017, 22:22 [IST]
Other articles published on Oct 22, 2017


Click it and Unblock the Notifications