உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்.. அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து !
துபாய்: ரியோ ஒலிம்பிக்கில் தோற்கடித்த கரோலினா மரினை உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து.
உலக பேட்மிண்டன் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து, ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரினை எதிர்கொண்டார்.

முதல் செட்டில் சிந்துவிற்கு கரோலினா கடும் நெருக்கடி கொடுத்தார். இருந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து 21-17 என அந்த செட்டை கைப்பற்றினார். 2-வது செட்டிலும் சிந்து அசத்தினார். இதனால் இந்த செட்டையும் 21-13 எனக் கைப்பற்றி நேர்செட் கணக்கில் கரோலினாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் சிந்து. அதோடு ரியோ ஒலிம்பிக்கில் கரேலினாவிடம் அடைந்த தோல்விக்கு இந்த வெற்றியின் மூலம் ஆறுதல் அடைந்தார் சிந்து.
Story first published: Saturday, December 17, 2016, 3:22 [IST]
Other articles published on Dec 17, 2016


Click it and Unblock the Notifications