வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்துவுக்கு ரூ.1 கோடி பரிசு - தெலுங்கானா அரசு அறிவிப்பு
ஹைதராபாத்: ரியோ ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றி சரித்திர சாதனை படைத்த சிந்துவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. தெலுங்கானா மாநில அரசு ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 31வது ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து, உலகின் முதல்நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினா மரினை சந்தித்தார். இதில் துவக்கம் முதல் அசத்திய சிந்து, முதல் செட்டை, 21-19 என வென்றார். இரண்டாவது செட்டில் தடுமாறிய சிந்து 12-21 என இழந்தார்.
(ஒலிம்பிக் பதக்க வேட்டையில் அசத்திய பிவி சிந்து- படங்கள்)
வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் கடுமையாக போட்டி நிலவ சிந்து வெற்றிக்காக கடுமையாக இறுதிவரை போராடினார். இறுதியில், இந்தியாவின் சிந்து, , 21-19, 12-21, 21-15 என ஸ்பெயினின் கரோலினாவிடம் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இதன்மூலம் இந்தியாவிற்கு பேட்மிண்டன் போட்டியில் முதன் முறையாக வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. இது சரித்திர சாதனையாகும். இதன் மூலம் 1 வெண்கலப்பதக்கத்துடன் 71வது இடத்தில் இருந்த இந்தியா, 1 வெள்ளி, 1 வெண்கலம் என இருபதக்கத்துடன் 10 இடங்கள் முன்னேறி 61வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
வெள்ளி வென்ற சிந்துவிற்கு பரிசும் பாராட்டுகளும் சிந்துவிற்கு குவிந்து வருகின்றன. தெலுங்கானா மாநில அரசு ரூ. 1கோடி ரொக்கப்பரிசு அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications