சிந்துவின் வெற்றியை வைத்து சானியா மிர்ஸாவை வம்பிக்கிழுக்கும் தெலுங்கானா!
ஹைதராபாத்: பி.வி. சிந்துவை வைத்து தெலுங்கானாவில் ஒரு புது கச்சேரி களை கட்டியுள்ளது. தெலுங்கானாவின் பிராண்ட் அம்பாசடராக அறிவிக்கப்பட்ட சானியா மிர்ஸாவை நீக்கி விட்டு அவருக்குப் பதில் பி.வி.சிந்துவை நியமிக்க வேண்டும் என்ற குரல் சமூக வலைதளங்களில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
சிந்துவின் பெற்றோர் ஆந்திராவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட சிந்து, தெலுங்கானாவின் கலாச்சாரத்தை மதித்து நடக்கிறார். அதற்கு முக்கியத்துவமும் கொடுக்கிறார் என்று நெட்டிசன்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
சிந்துவின் பெற்றோர் ரமணாவும், விஜயலட்சுமியும் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆனால் சிந்து பிறந்தது, வளர்ந்தது, தற்போது படித்து வருவது ஹைதராபாத்தில்தான். அவர் ஹைதராபாத்தில் உள்ள செயின்ட் ஆன்ஸ் கல்லூரியில் படித்து வருகிறார்.

பிரிவினை கோஷங்கள்
மாநிலப் பிரிவினையால் ஏற்பட்ட சலசலப்புகள் இன்னும் ஆந்திரா, தெலுங்கானா இடையே தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. இந்த நிலையில் சிந்து சானியாவை வைத்து புதுப் பிரச்சினையில் தெலுங்கானாவைச் சேர்ந்த சமூக வலைதள வாசிகள் இறங்கியுள்ளனர்.

சிந்துதான் பெஸ்ட்
சானியா மிர்ஸாவை தெலுங்கானாவின் பிராண்ட் அம்பாசடராக அறிவித்துள்ளது தெலுங்கானா அரசு. ஆனால் அவரை விட சிந்துதான் அதற்கு பொருத்தமானவர் என்று பலர் பதிவிட்டு வருகின்றனர்.

"பதுக்கம்மா" சிந்து
ஹைதராபாத்தில் பிரபலமானது மகன்கலு ஜாத்தரா என்ற விழா. அந்த விழாவில் சிந்து கலந்து கொண்டபோது கையில் பதுக்கம்மா என்ற தெலுங்கானாவின் கலாச்சார அடையாளத்தையும், தலையில் கும்பத்தையும் சுமந்து வருவது போன்ற படங்களை நெட்டில் பலர் ஷேர் செய்து வருகின்றனர்.

இவர்தான் கலாச்சார அடையாளம்
அதைப் போட்டு இவர்தான் உண்மையான தெலுங்கானாவின் கலாச்சாரக் காவலர். சிந்துதான் தெலுங்கானாவின் கலாச்சாரத்திற்கு மதிப்பு கொடுத்து விழாக்களில் கலந்து கொள்கிறார் என்று கூறி சானியாவை கிண்டலடித்துள்ளனர்.

சிந்துவை நியமிக்க வேண்டும்
எனவே சானியாவை நீக்கி விட்டு சிந்துவை பிராண்ட் அம்பாசடராக தெலுங்கானா அரசு அறிவிக்க வேண்டும் என்று தெலுங்கானா நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆந்திரா மட்டும் ஏன் அமைதியாக இருக்கு?
இவர்கள் இப்படிக் கிளம்பியுள்ள நிலையில் அடுத்து ஆந்திராக்காரர்கள் சிந்து எங்களுக்கே சொந்தம் என்று கூறி கிளம்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிந்து வென்றால் இந்த சண்டை மேலும் உக்கிரமடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நல்லா அடிச்சுக் கேளுங்கப்பா!


Click it and Unblock the Notifications