Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மாநில அளவிலான யு15 பேட்மிண்டன் தொடர்.. போட்டிபோட்ட 1,124 வீரர்கள்.. சிறப்பாக நடந்த பரிசளிப்பு விழா!

செங்கல்பட்டு: தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கம் மற்றும் ஸ்பார்க் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக யு15 சிறார்களுக்கான மாநில அளவிலான பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த சாம்பியன்ஷிப் தொடரில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 1,124 சிறார்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் கிரிக்கெட் கடந்து பல்வேறு விளையாட்டுகளிலும் குழந்தைகள், இளைஞர்கள் கவனம் செலுத்த தொடங்கி இருக்கின்றனர். ஏற்கனவே இந்தியாவின் செஸ் அடையாளமாக தமிழ்நாடு திகழ்ந்து வரும் சூழலில், அடுத்தடுத்து பேட்மிண்டன், ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகளிலும் கவனத்தை திருப்பி இருக்கின்றனர்.

U15 Badminton Championship tournament

அந்த வகையில் சிறார்களுக்கான பேட்மிண்டன் திறமையை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கம் மற்றும் ஸ்பார்க் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக யு15 சிறார்களுக்கான மாநில அளவிலான பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நவம்ப்ர் 10 முதல் நவம்பர் 16ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த சாம்பியன்ஷிப் தொடரில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 1,124 சிறார்கள் கலந்து கொண்டனர்.

இதன் மூலமாக இதுவரை நடத்தப்பட்ட மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளிலேயே, அதிக போட்டியாளர்கள் கலந்து கொண்டதாக தொடராக பெருமை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் போட்டியில் கலந்து கொண்டு ஒவ்வொரு போட்டியாளருக்கும் VIBE இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பாக ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதன்பின் பரிசளிப்பு விழாவில் சென்னையில் உள்ள ஸ்பார்க்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக பேட்மிண்டட்ன் சங்கத் தலைவர் அருணாச்சலம், பொருளாளர் மோகன் குமார், செங்கல்பட்டு பேட்மிண்டன் சங்கத் தலைவர் ஜோன்ஸ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதேபோல் சிறப்பு விருந்தினராக இயக்குநர் லிங்குசாமி கலந்து கொண்டார். யு15 சிறார்களுக்கான மாநில அளவிலான பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதோடு, 2025ஆம் ஆண்டு தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற 6 வீரர்களுக்கு ஊக்கத்தொகையும் அளிக்கப்பட்டது.

Story first published: Wednesday, November 19, 2025, 11:30 [IST]
Other articles published on Nov 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+