ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் நுழைந்த பி.வி. சிந்து எங்க டீம்ணே.... இது விஜயகாந்த் மகன்
சென்னை: ரியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்து இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்திருக்கும் பி.வி.சிந்து தங்களுடைய சென்னை ஸ்மாஷர்ஸ் டீமில் விளையாடியவர் என்று பெருமிதம் கொள்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன்.
பிவி சிந்து குறித்து விகடன் குழுமத்துக்கு விஜய பிரபாகரன் அளித்த பேட்டி:
பேட்மிட்டன் லீக் கிளப் போட்டிக்காக சிந்து சென்னை வந்திருந்தாங்க . ஒரு ப்ரோமோ ஷூட் நடந்தது. அப்பதான் சிந்துவை முதல்ல பார்த்தேன்.
செம போல்ட் ஃபர்சன். ரொம்ப ப்ரெண்ட்லி. எனக்கு சின்ன வயசுல இருந்தே பேட்மிட்டன் கேம்ல ரொம்ப ஆர்வம்.

சிந்துவைத் தவிர..
சென்னை ஸ்மாஷர்ஸ் டீம் தொடங்கினதும் எங்க டீம்ல சிந்து கண்டிப்பாக இருக்கணும்னு நினைச்சேன். வேற எந்த ப்ளேயரையும் என்னால யோசிக்ககூட முடியலை.

வெற்றியை குவிப்பாங்க..
அவங்க யங் ரொம்ப எனர்ஜியோட விளையாடுவாங்க. எங்க டீம்லயும் ஜெயிச்சு பல வெற்றிகளை குவிச்சாங்க. இப்ப ஒலிம்பிக்லயும் வெற்றியை குவிக்கப்போறாங்க.

ஜெயிக்க பிறந்தவங்க..
சிந்து ஜெயிப்பதற்காகவே பிறந்தவங்க. கண்டிப்பாக பைட் செஞ்சு கோல்ட் மெடல் வாங்குவாங்க. காலிறுதியில் ஜெயிச்சதும் சிந்துவை கூப்பிட்டு உடனே வாழ்த்துகள் சொல்லிட்டேன்.

தங்கம் வெல்வாங்க...
முழு எனர்ஜியோட நம்பிக்கையாக விளையாடுங்க. தங்கம் பதக்கம் ஜெயிச்சு இந்தியாவுக்கு பெருமை சேருங்கனு சொன்னேன். அவங்களும் அதே நம்பிக்கையில் தீவிரமான பயிற்சி எடுத்துட்டு இருக்காங்க.

வீ ஆர் வெயிட்டிங்...
செம ஹாப்பியாக நம்பிக்கையாக இருக்காங்க. அவங்களும் கோல்ட் மெடல் ஜெயிக்கணும்னு என்கிட்ட சொன்னாங்க. நிச்சயம் ஜெய்ப்பாங்க. ஆல் தி பெஸ்ட் சிந்து. வீ ஆர் வெயிட்டிங்.


Click it and Unblock the Notifications