Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிந்துவுக்கு ஈஸி.. ஸ்ரீகாந்துக்கு சவால்!

துபாய்: துபாயில் நடக்க உள்ள சூப்பர் சீரியஸ் பாட்மின்டன் பைனல்ஸ் போட்டியில் சற்று சுலபமாக பிரிவில் சிந்து இடம்பெற்றுள்ளார். அதே நேரத்தில் கிடாம்பி ஸ்ரீகாந்த், உலகின் நம்பர் 1 வீரரான டென்மார்க்கின் வி்க்டர் அக்செல்சன் உள்ள பிரிவில் இடம்பெற்றுள்ளார்.

பாட்மின்டன் போட்டிகளில், ஒவ்வொரு ஆண்டும், சூப்பர் சீரியஸ் பிரிவின் கீழ், 13 ஓபன் போட்டிகள் நடக்கின்றன. அதில் கடைசியாக சூப்பர் சீரியஸ் மாஸ்டர்ஸ் பைனல்ஸ் போட்டி துபாயில் நடக்க உள்ளது.

டிசம்பர் 13 முதல் 17ம் தேதி வரை நடக்கும் இந்தப் போட்டியில், உலகின் தலைச் சிறந்த 8 வீரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.

தரவரிசையில் 2வது இடம்

தரவரிசையில் 2வது இடம்

இந்த ஆண்டுக்கான சூப்பர் சீரியஸ் பைனல்ஸ் போட்டிக்கு, இந்தியாவில் இருந்து ஸ்ரீகாந்த், சிந்து தகுதி பெற்றுள்ளனர். ஸ்ரீகாந்த், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஓபன் பட்டங்களை வென்றதுடன், உலகத் தரவரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறினார்.

அசத்தி வரும் சிந்து

அசத்தி வரும் சிந்து

பி.வி. சிந்து, இந்திய ஓபன் மற்றும் கொரிய ஓபன் ஆகிய இரண்டு சூப்பர் சீரியஸ் பட்டங்களும்ஸ ஒரு கிராண்ட் பிரிக்ஸ் பட்டமும் வென்றார். அதைத் தவிர, உலக சாம்பியன் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்றார். உலகத் தரவரிசையில், சிந்து 2வது இடத்தில் உள்ளார்.

சிந்துவுக்கு சான்ஸ் அதிகம்

சிந்துவுக்கு சான்ஸ் அதிகம்

இந்த நிலையில், துபாயில் நடக்கும் சூப்பர் சீரியஸ் மாஸ்டர்ஸ் பைன்ல்ஸ் போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதில் மகளிர் பிரிவில் ஏ பிரிவில் சிந்து இடம்பெற்றுள்ளார். தனது முதல் ஆட்டத்தில் சீனாவின் ஹி பிங்ஜியாவோவுடன் மோதுகிறார்.

சுலபமான பிரிவில் சிந்து

சுலபமான பிரிவில் சிந்து

ரவுண்ட் ராபின் முறையில் நடக்கும் இந்தப் போட்டித் தொடரின் அடுத்த ஆட்டங்களில், ஜப்பானின் அகேனே யாமகூச்சி, ஜப்பானின் சயாகோ சடோ ஆகியோருடன் மோதுகிறார். இந்தப் போட்டியில் மிகவும் சுலபமான பிரிவில் சிந்து இடம்பெற்றுள்ளது அவருக்கு சாதகாகும். உலகின் நம்பர் 1 வீராங்கனையான சீன தைபேயின் டாய் ட்சூ யிங் உள்ளிட்டோர் பி பிரிவில் உள்ளனர்.

சவாலான பிரிவில் ஸ்ரீகாந்த்

சவாலான பிரிவில் ஸ்ரீகாந்த்

ஆடவர் ஒற்றியரில் பி பிரிவில் ஸ்ரீகாந்த் உள்ளார். உலகின் நம்பர் 1 வீரரான டென்மார்க்கின் விக்டர் அக்செல்சனும் இந்தப் பிரிவில் உள்ளார். சீன தைபேயைச் சேர்ந்த உலகத் தரவரிசையில் 7வதுஇடத்தில் உள்ள சோவ் டியான் சென், 8வது இடத்தில் உள்ள சீனாவின் ஷி யுகி ஆகியோர் இந்தப் பிரிவில் உள்ளனர்.

சூப்பர் சீரியஸ் போட்டியில் அசத்தலான ஆட்டங்களை வெளிப்படுத்தியதுடன், உலகத் தரவரிசையில் முன்னேறியுள்ளது ஸ்ரீகாந்த் மற்றும் சிந்துவுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. முதல் முறையாக மாஸ்டர்ஸ் பைனல்ஸ் போட்டிக்கு நுழைந்துள்ளதால், பட்டம் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

Story first published: Wednesday, December 13, 2017, 21:34 [IST]
Other articles published on Dec 13, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+