ஒரே கய்யா முய்யா சண்டை.. அதுவும் இந்தியில்.. யோகேஷ்வர் தத்தை வம்புக்கிழுத்த அல்கா லம்பா
டெல்லி: டெல்லியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவருக்கும் பாஜகவைச் சேர்ந்த மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத்துக்கும் இடையே கடுமையான வாய்ச் சண்டை நடந்துள்ளது டிவிட்டரில்.
Recommended Video
பாஜகவில் உள்ள அனைவருமே சங் பரிவார் அமைப்பின் விஷ வித்துக்கள் என்று அவர் கூறப் போக, அவருக்கும் யோகேஷ்வர் தத்துக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டு விட்டது.
அல்கா லம்பா எங்கு இருந்தாலும் அங்கு ஏதாவது சர்ச்சையில் சிக்குவது வாடிக்கைதான். முன்பு இவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தார். அங்கும் சர்ச்சையில் சிக்கவே கட்சியை விட்டு விலகி காங்கிரஸில் இணைந்தார். இப்போது இங்கும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

வெண்கலப் பதக்கம் வென்ற தத்
ஓலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் யோகேஷ்வர் தத். இந்த நிலையில் அல்கா லம்பா தனது டிவிட்டரில் பிரதமர் நரேந்திர மோடி ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பேசும்போது எடுத்த படத்தை வைத்து டிவீட் போட்டிருந்தார். அதில் சங் பரிவார அமைப்பைச் சேர்ந்த அனைவருமே விஷ வித்துக்கள் என்ற அர்த்தத்தில் எழுதியிருந்தார்.

கோபத்துடன் வாக்குவாதம்
இதனால் கோபமடைந்த யோகேஷ்வர் தத், அதற்குப் பதில் கொடுத்தார். அதில், உங்களது பிறப்பும், வளர்ப்பும் உங்களது மனநிலையிலிருந்தே தெரிய வருகிறது. நீங்கள் போட்டுள்ள போட்டோவில் உள்ளவர் இந்த நாட்டு மக்களால் நேசிக்கப்படுபவர். இந்த நாட்டை நேசிப்பவர். அதை நீங்கள் மனதில் கொண்டிருக்க வேண்டும். நாடு அவருக்குத் துணையாக நிற்கிறது. ஆனால் உங்களைப் போன்ற மன நிலை பாதிக்கப்பட்ட சிலர் மட்டுமே விலகி இருக்கிறீர்கள் என்று சாடியிருந்தார்.

அல்காவின் அதிர்ச்சி டிவீட்
இதைப் பார்த்து ஆவேசமடைந்த அல்கா லம்பா, உங்க அப்பா, அம்மாவைப் பற்றி எனக்கு இப்போது சந்தேகம் வருகிறது என்று கூறப் போக தத்தும் விடவில்லை. சமூக வலைதளங்களில் கொஞ்சம் கூட நாகரீகத்தைப் பேணாத ஒருவரிடம் அதை எதிர்பார்ப்பது தவறு என்று கூறியிருந்தார். இதை வைத்து இரு தரப்பும் மோதிக் கொண்டதால் டிவிட்டர் தளமே ஆடிப் போய் விட்டது.

யோகேஷ்வர் தத் கடும் சாடல்
மேலும் அவர் கூறுகையில் ஷேம் ஆன் அல்கா லம்பா என்று ஹேஷ்டேக் போட்டு ஏதாவது பேசினால் உடனே தாயாரை அவமானப்படுத்துகிறீர்கள்.. அல்லது பிரதமரை அவமானப்படுத்துகிறீர்கள்.. அதுவும் இல்லாவிட்டால் ஒரு பெண்ணைப் பார்த்து என்று அந்த டயலாக்கை எடுத்து விடுவீர்கள் என்றும் கடுமையாக சாடியுள்ளார் யோகேஷ்வர் தத்.


Click it and Unblock the Notifications