Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“கொடுமை தாங்கல“.. ஒலிம்பிக் நாயகி லாவ்லினா பரபர குற்றச்சாட்டு.. சர்ச்சையில் குத்துச்சண்டை சமேளனம்!!

பிர்மிங்கம்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்றுக்கொடுத்த லவ்லினா போர்கோஹைன் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீராங்கனையாக திகழ்பவர் அசாமை சேர்ந்த லாவ்லினா போர்கோஹைன்.

கடந்தாண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார்.

லாவ்லினாவின் குற்றச்சாட்டு

லாவ்லினாவின் குற்றச்சாட்டு

தற்போது காமென் வெல்த் போட்டிகளுக்காக தீவிரமாக தயாராகி வரும் லாவ்லினா, இந்திய குத்துச்சண்டை சமேளனம் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது பயிற்சி செய்யவிடாமல் தன்னை துன்புறுத்தவதாகவும், குத்துச்சண்டை சமேளத்திற்குள் அரசியல் நடப்பதாகவும் அவர் குறிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

பிரச்சினை என்ன

பிரச்சினை என்ன

இதுகுறித்த அந்த பதிவில், " நான் துன்புறுத்தப்படுவதை கூறியே ஆக வேண்டும். நான் ஒலிம்பிக் பதக்கம் உள்ளிட்ட பல பதக்கங்களை வெல்ல காரணமாக இருந்த எனது பயிற்சியாளர் சந்தியா குருங்ஜி, எனக்கு பயிற்சி கொடுப்பதில் இருந்து திடீரென நீக்கப்பட்டுவிட்டார். அவர் துரோனாச்சாரியா விருது பெற்ற பயிற்சியாளர் ஆவார். எனது மற்றொரு பயிற்சியாளரையும் யாரோ வரவிடாமல் தடுக்கிறார்கள்.

துன்புறுத்தப்படுகிறேன்

துன்புறுத்தப்படுகிறேன்

காமன் வெல்த் போட்டிகள் நடைபெறும் பகுதிக்குள்ளேயே 2 பயிற்சியாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கடந்த 8 நாட்களாக நான் பயிற்சியே செய்யாமல் இருக்கிறேன். அவர்கள் இல்லாததால், இங்கு எனக்கு மன ரீதியாக நிறைய துன்புறுத்தல்கள் ஏற்படுத்தப்படுகிறது. இதனால் காமன் வெல்த் போட்டிகளில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை.

அரசியல் நடக்கிறது

அரசியல் நடக்கிறது

குத்துச்சண்டை சமேளனத்தில் கீழ்த்தரமான அரசியல் நடக்கிறது. ஆனால் அதை எதிர்த்தோ, அதில் தலையிட்டோ எனது காமன் வெல்த் பதக்க கனவை சிதைக்க நான் விரும்பவில்லை. இந்த தடைகளை தாண்டி நான் நாட்டிற்காக பதக்கம் வெல்வேன் என லாவ்லினா கூறியுள்ளார்.

Story first published: Monday, July 25, 2022, 20:35 [IST]
Other articles published on Jul 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+