Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரியோ ஒலிம்பிக்ஸ்: குத்துச் சண்டையில் மனோஜ் குமார் அபாரம்- அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் குத்துச் சண்டை 64 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் மனோஜ் குமார் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 31வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. 64கிலோ எடைக்கான ஆண்கள் குத்துச் சண்டை தகுதிச் சுற்றுக்கான போட்டியில் இந்திய வீரர் மனோஜ் குமார், லித்துவனியாவை சேர்ந்த எவால்டஸ் பெட்ராஸ்கஸ் உடன் மோதினார்.

இந்தப் போட்டியில் இந்திய வீரர் மனோஜ் குமார் 2 -1 என்ற கணக்கில், லித்துவனியா வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Boxer Manoj Kumar Stuns Olympic Bronze-Medallist Evaldas Petrauskas to Enter Pre-Quarters

செட் 1 புள்ளிகள் : மனோஜ் குமார் 29 - 28 எவால்டஸ் பெட்ராஸ்கஸ்

செட் 2 புள்ளிகள் : மனோஜ் குமார் 29 - 28 எவால்டஸ் பெட்ராஸ்கஸ்

செட் 3 புள்ளிகள் : மனோஜ் குமார் 28 - 29 எவால்டஸ் பெட்ராஸ்கஸ்

ஞாயிறு அன்று நடைபெறும் போட்டியில் உஸ்பெகிஸ்தான் ஃபஜ்லுதீன் கய்ப்நஜாரவ் என்ற வீரருடன் பலப்பரிச்சை நடத்த உள்ளார். இவர் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்சிப் போட்டியின் போது அரையிறுதியில் இந்திய வீரர் மனோஜ் குமாரை வீழ்த்தி, இறுதிப்போட்டியில் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, August 11, 2016, 11:12 [IST]
Other articles published on Aug 11, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+