Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவில் உதயமான புதிய குத்துச்சண்டை ஹீரோ.. சர்வதேச அளவில் பட்டம் வென்ற மந்தீப் ஜங்கரா

மும்பை : ஒலிம்பிக், காமன்வெல்த் உள்ளிட்ட குத்துச்சண்டை போட்டிகளில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர்கள் சர்வதேச அளவில் நடைபெறும் பாக்சிங் சாம்பியன்ஷிப் தொழில் முறை போட்டிகளில் ஏன் பங்கேற்பதில்லை என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே இருக்கிறது.

குத்துச்சண்டை போட்டிகளில் தொழிற்முறை குத்துச்சண்டை மற்றும் அமீச்சூர் குத்துச்சண்டை என இரண்டு வகையான போட்டிகள் இருக்கிறது. பொதுவாக இந்திய வீரர்கள் அமீச்சூர் குத்துச்சண்டை போட்டிகளில் பயிற்சி பெற்று காமன்வெல்த் ஒலிம்பிக் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போன்ற தொடரில் பங்கேற்பார்கள்.

mandeep jangra wbf world title boxing news sports news

ஆனால் தொழில் முறை குத்துச்சண்டை என்பது முகமது அலி, மைக் டைசன் போன்ற வீரர்கள் உருவான இடமாகும். இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய குத்துச்சண்டை வீரர்கள் தற்போது மெது மெதுவாக தொழில் முறை குத்துச்சண்டை போட்டிகளிலும் விளையாடி வருகிறார்கள்.குறிப்பாக காமன்வெல்த் போட்டியில் 2014 ஆம் ஆண்டு வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர் மந்திப் ஜாங்கரா கடந்த 2021 ஆம் ஆண்டு தொழில் முறை குத்துச்சண்டை போட்டிக்கு காலடி எடுத்து வைத்தார்.

அறியாமை சேர்ந்த இவர் தற்போது முன்னாள் ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்தை வென்ற ராய் ஜோன்ஸ் இடம் பயிற்சி பெற்று வருகிறார். இந்த சூழ்நிலையில் கேமன் தீவில் நடைபெற்ற சூப்பர் ஃபெதர் வைட் உலக சாம்பியன் பட்டத்திற்கான போட்டியில் பிரிட்டன் வீரர் கார்னர் மேக்கண்டசை மந்தீப் ஜங்ரா எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 10 சுற்று வரை அபாரமாக விளையாடிய இந்திய வீரர் மந்தீப் ஜங்ரா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

mandeep jangra wbf world title boxing news sports news

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மந்தீப் ஜங்ரா, என்னுடைய குத்துச்சண்டை வாழ்க்கையிலே மிகப் பெரிய வெற்றி இதுவாகும். எனக்கு ஸ்பான்சர் வழங்கிய நர்ஸ் புல்ட் நிறுவனம் மற்றும் என்னுடைய பயிற்சியாளர் ராய் ஜோன்ஸ் ஆகியோருக்கு என்னுடைய நன்றி. இந்த சாம்பியன் பட்டம் வெல்வதற்காக நான் பல ஆண்டுகள் உழைத்து வருகின்றேன். இது பெருமைமிக்க தருணமாக நான் கருதுகின்றேன்.

இது என்னுடைய நாட்டிற்கு புகழை சேர்க்கும் என நினைக்கின்றேன். என்னுடைய இந்த வெற்றி மூலம் மேலும் பல குத்துச்சண்டை வீரர்கள் எங்களது நாட்டில் இருந்து தொழில்முறை குத்துச்சண்டைக்கு வருவார்கள் என நம்புகின்றேன். எங்கள் நாட்டில் பல அபாரமான குத்துச்சண்டை வீரர்கள் இருக்கிறார்கள். திறமை என்பது எங்களுக்கு பஞ்சம் கிடையாது.

எங்களிடம் நல்ல மேலாளர்கள் மற்றும் தொழில்முறை குத்துச்சண்டைகளை ஊக்குவிக்கும் நிபுணர்கள் இருந்தால் நிச்சயம் நாங்களும் பட்டம் வெல்வோம் என்று மந்திப் ஜங்கரா தெரிவித்துள்ளார். தொழில்முறை குத்துச்சண்டையில் இதுவரை 12 போட்டிகளில் பங்கேற்றுள்ள மந்தீப் ஜங்கரா, 11 வெற்றி, ஒரு தோல்வி மற்றும் 7 நாக்கோட் வெற்றிகளை பெற்றிருக்கிறார்.

Story first published: Wednesday, November 6, 2024, 14:56 [IST]
Other articles published on Nov 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+