Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செய்யக் கூடாத காரியத்தை செய்த உலகின் நம்பர் 1 எம்எம்ஏ வீரர்.. போலீஸ் கஸ்டடியில் நடந்த விசாரணை!

கோர்சிகா : உலகின் நம்பர் 1 மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட்ஸ் என்றும் கலப்பு தற்காப்புக் கலை வீரரான கோனோர் மெக்ரிகோர் காவல்துறை கஸ்டடியில் விசாரணைக்கு உள்ளாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

பாலியல் ரீதியாக ஒருவரை தாக்கியதாகவும், ஆடைகளை களைந்ததாகவும் அவர் மீது புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோனோர் மெக்ரிகோர்

கோனோர் மெக்ரிகோர்

கோனோர் மெக்ரிகோர் எம்எம்ஏ எனப்படும் கலப்பு தற்காப்புக் கலை வீரர் ஆவார். யூஎஃப்சி எனும் மோதல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கும் போட்டிகளுக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. அதே போல, அவருக்கு மிகப் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது.

மூன்றாவது ஓய்வு அறிவிப்பு

மூன்றாவது ஓய்வு அறிவிப்பு

அவர் சில மாதங்களுக்கு முன் தன் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அது அவரது மூன்றாவது ஓய்வு அறிவிப்பு என்பது தான் இதில் வேடிக்கை. ஒவ்வொரு முறையும் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு விட்டு, சில மாதங்கள் கழித்து மீண்டும் களத்துக்கு வருவது அவரது வாடிக்கை.

பாரில் ரகளை

பாரில் ரகளை

இந்த நிலையில், அவர் சமீபத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கோர்சிகா எனும் தீவில் ஒரு பாரில் ரகளை செய்துள்ளார். ஒருவரை பாலியல் ரீதியாக தாக்கியதோடு, தன் ஆடைகளை களைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் செப்டம்பர் 10 அன்று நடைபெற்றுள்ளது.

கஸ்டடியில் விசாரணை

கஸ்டடியில் விசாரணை

பாதிக்கப்பட்டவர்கள் அவர் மீது புகார் அளித்ததை தொடர்ந்து கோர்சிகா காவல்துறை அவரை தங்கள் கஸ்டடியில் வைத்து விசாரணை நடத்தி உள்ளனர். அவரை சிறையில் அடைக்காமல் உடனே விடுவித்து விட்டதாகவும் கோனோர் மெக்ரிகோர் தரப்பு கூறுகிறது.

முந்தைய சர்ச்சை

முந்தைய சர்ச்சை

கோனோர் மெக்ரிகோர் மீதான சர்ச்சைகள் புதிதல்ல. அவர் கடந்த ஆண்டு அயர்லாந்தில் ஒரு பாரில் குடித்து விட்டு, ஒரு வயதான நபரை தாக்கி சர்ச்சைக்கு உள்ளானார். அந்த சம்பவத்தில் டுப்ளின் நீதிமன்றத்தில் அவர் பாதிக்கப்பட்ட நபரிடம் மன்னிப்பு கோரி தண்டனையில் இருந்து தப்பினார்.

மீண்டும் சர்ச்சை

மீண்டும் சர்ச்சை

தற்போது ஓய்வில் இருக்கும் அவர் கோனோர் மெக்ரிகோர் மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார். அவர் ஓய்வு பெற்றதாக கூறினாலும் அவருக்கு இன்னும் எம்எம்ஏ அரங்கில் மவுசு குறையவில்லை. அவர் போட்டிகளில் பங்கேற்றால் இப்போதும் பல கோடிகளை குவிப்பார் என பேசப்பட்டு வருகிறது.

Story first published: Sunday, September 13, 2020, 11:08 [IST]
Other articles published on Sep 13, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+