Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் போட்டி தள்ளிப் போட்டது.. நச்சுன்னு எடுத்த சரியான முடிவு.. மேரி கோம் ஹேப்பி

டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை தள்ளிப் போட்ட முடிவு சரியானதே என்று குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் கூறியுள்ளார்.

அனைவரும் எதிர்பார்த்தது போலவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒத்தி வைத்து விட்டனர். ஒரு வருடம் கழித்து அதாவது அடுத்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த ஒத்திவைப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமும் இதை வரவேற்றுள்ளார்.

ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறை

ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறை

ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் இதுவரை எந்த போட்டியும் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதில்லை. இதுதான் முதல் முறையாகும். அதேசமயம், 1916, 1940, 1944 ஆகிய மூன்று ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை ஒத்தி வைக்கப்பட்டதில்லை. இதுதான் முதல் முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேரிகோம் டிவீட்டில் வரவேற்பு

2021ல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்று அறிவித்துள்ள சர்வதேச ஒலிம்பிக் சங்கம் இப்போட்டி டோக்கியோ ஒலிம்பிக் 2020 என்ற பெயரிலேயே நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இப்போட்டி ஒத்திவைப்பு குறித்து மேரி கோம் வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இது சரியான முடிவு என்று கருத்து தெரிவித்துள்ளார்.

அருமையான, சரியான முடிவு

அருமையான, சரியான முடிவு

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் மேரி கோம் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர். 2012 ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றவர். இவர் போட்டுள்ள டிவீட்டில் அருமை, சரியான முடிவு என்று ஐஓசியைப் பாராட்டியுள்ளார். முன்னதாக நேற்று ஜப்பான் பிரதமரும், ஐஓசி தலைவரும் தொலைபேசி மூலமாக ஆலோசனை நடத்தினர். அப்போதுதான் இந்த ஒத்திவைப்பு முடிவு எடுக்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.

அடுத்த ஆண்டுதான் நடக்கும்

அடுத்த ஆண்டுதான் நடக்கும்

முன்னதாக இந்த ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ம் தேதி வரை கோடை கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதேபோல பாராலிம்பிக் எனப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக்கை ஆகஸ்ட் 25ம் தேதி தொடங்கி செப்டம்பர் 6ம் தேதி வரை நடத்த திட்டமிட்டிருந்தனர். தற்போது அனைத்துப் போட்டிகளும் அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, March 25, 2020, 14:10 [IST]
Other articles published on Mar 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+