Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கையைப் பிடித்து அத்துமீற முயன்ற ரிக்ஷாக்காரரை எட்டி உதைத்துத் தப்பிய மேரி கோம்

கொல்கத்தா: நானும் பாலியல் ரீதியிலான தாக்குதலுக்கு ஆளானவள்தான். எனக்கு 18 வயதாக இருந்தபோது அந்த சிக்கலைச் சந்தித்தேன். ஆனால் என்னை அத்துமீறி பயன்படுத்த நினைத்த நபரிடமிருந்து நான் போராடி விடுபட்டு தப்பினேன் என்று கூறியுள்ளார் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குத்துச் சண்டை வீராங்கனையான மேரி கோம்.

உலகம் முழுவதும் இந்த பாலியல் தொல்லைகள் இருக்கத்தான் செய்கின்றன. சாதாரணர்கள் உள்பட பிரபலங்கள் வரை பாலியல் சில்மிஷங்களைச் சந்திக்காதவர்களே இல்லை என்று கூறலாம்.

பிரபல ஓப்ரா வின்பிரே கூட சிறு வயதில் பாலியல் பலாத்காரத்திற்குள்ளானவர்தான். இதை அவரே சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியில் சொன்னார்.

இந்த நிலையில், இந்தியாவின் மேரி கோம், சிறு வயதில் பாலியல் சித்திரவதைக்குள்ளானதாக பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் அவர் தெரிவித்த கருத்துக்கள்...

பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை

பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை

பெண்களின் பாதுகாப்பு இந்தியாவில் கேள்விக்குறியாக உள்ளது. எங்கு போனாலும் உடல் ரீதியான துன்புறுத்தல்கள் பெண்களுக்கு அதிகமாகவே உள்ளது.

தாக்குதலிலிருந்து தப்பிக்க முயற்சி தேவை

தாக்குதலிலிருந்து தப்பிக்க முயற்சி தேவை

பெண்கள் உடல் ரீதியிலான பாலியல் தாக்குதலில் சிக்காமல் தப்பிக்க சில உடல் ரீதியான பயிற்சிகளைத் தெரிந்து வைத்திருப்பது நல்லது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலிமையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

பயமின்றி தாக்குங்கள்

பயமின்றி தாக்குங்கள்

உங்களது விருப்பம் இல்லாமல், உங்களை உடல் ரீதியாக எந்த ஆணாவது தவறாக பயன்படுத்த முனைந்தால் அவர்களை எதிர்த்து தைரியமாக போராடுங்கள், தாக்குங்கள்.

நானும் கூட சந்தித்தேன்

நானும் கூட சந்தித்தேன்

எனக்கு 18 வயதாக இருக்கும்போது நானும் கூட பாலியல் வக்கிரத்தால் பாதிக்கப்பட்டேன். சர்ச்சுக்குப் போய்க் கொண்டிருந்தபோது, நேரமாகி விட்டதால் ரிக்ஷாவில் போனேன்.

கையைப் பிடித்து இழுத்த ரிக்ஷாக்காரர்

கையைப் பிடித்து இழுத்த ரிக்ஷாக்காரர்

அப்போது ரிக்ஷாக்காரர் திடீரென எனது கையைப் பிடித்து இழுத்து அத்துமீற முயன்றார்.ஆனால் நான் சட்டென சுதாரித்து, அந்த நபரை எட்டி உதைத்து கீழே தள்ளி விட்டேன். பின்னர் அங்கிருந்து தப்பி வந்து விட்டேன்.

எப்போதும் சுதாரிப்பாக இருங்கள்

எப்போதும் சுதாரிப்பாக இருங்கள்

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் பெண்கள் எப்போதும் சுதாரிப்பாக இருக்க வேண்டும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், கவனமுடன் இருக்க வேண்டும் என்றார் மேரி கோம்

2012 ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்

2012 ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்

மேரி கோம் 2012 ஒலிம்பிக் போட்டியில், பிளைவெயிட் குத்துச் சண்டைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றவர். சமீபத்தில் பெண்களின் சுய பாதுகாப்பை போதிக்கும் செல்போன் ஆப் ஒன்றையும் அவர் தொடங்கி வைத்தார் என்பது நினைவிருக்கலாம்.

மேரி கோமின் வாழ்க்கை வரலாறு இந்தியில் திரைப்படமாகி வருகிறு என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, January 17, 2014, 14:53 [IST]
Other articles published on Jan 17, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+