Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய வீராங்கனைகள் உலக சாதனை.. ஒரே நாளில் 2 தங்கம்.. உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் அசத்தல்

டெல்லி : மகளிருக்கான உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் ஒரே நாளில் இந்திய வீராங்கனைகள் 2 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தி இருக்கிறார்.

டெல்லியில் நடைபெற்ற இந்த தொடரின் இறுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை நித்து கங்காஸ், மங்கோலிய வீராங்கனை லுத்சாய்கானை எதிர்கொண்டார்.

22 வயதான நித்து, ஆட்டத்தி தொடக்கம் முதலே ஆக்கோரஷ தாக்குதலில் ஈடுபட்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில், லுத்சாய்கானை எளிதாக 5க்கு0 என்ற கணக்கில் வீழ்த்திய நித்து கங்காஸ் தங்கப் பதக்கத்தை வென்றார்.

நித்து கங்காஸ் மகிழ்ச்சி

நித்து கங்காஸ் மகிழ்ச்சி

இதன் மூலம் இந்திய குத்துச்சண்டை வரலாற்றில் உலக சாம்பியன் பட்டம் வென்ற 6வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் படைத்தார். இது குறித்து பேசிய நித்து, தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், கடந்த முறை தோற்ற பிறகு, கடும் பயிற்சியை மேற்கொண்டு, சொந்த நாட்டில் பதக்கம் வென்றது திருப்தி அளிப்பாகவும் அவர் கூறினார். கடும் பயிற்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் கூறினார்.

சாவீட்டி போராவுக்கு தங்கம்

சாவீட்டி போராவுக்கு தங்கம்

இதனைத் தொடர்ந்து மகளிருக்கான 81 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் சாவீட்டி போரா முன்னாள் சாம்பியன் வாங் லினாவை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் வாங் லீனாவை வீழ்த்தி சாவீட்டி போரா தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் குத்துச் சண்டை போட்டியில் உலக சாம்பியன் ஆன 7வது இந்தியர் என்ற பெருமை சாவீட்டிக்கு கிடைத்தது. உலக சாம்பியனாக வேண்டிய எனது கனவு நிறைவேறி இருப்பதாக சாவீட்டி கூறியுள்ளார்.

மேலும் 2 தங்கத்திற்கு வாய்ப்பு

மேலும் 2 தங்கத்திற்கு வாய்ப்பு

இதன் மூலம் சாம்பியன் பட்டம் வென்ற 2 வீராங்கனைகளுக்கும் தலா 87 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் கிடைத்தது. இவர் ஏற்கனவே 2014ஆம் ஆண்டு நடைபெற்ற உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் சாவீட்டி போரா வெள்ளி வென்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று நாளை நடைபெறும் இறுதிச் சுற்றில் மேலும் 2 இந்திய வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

சாதனை படைப்பாரா லவ்வினா

சாதனை படைப்பாரா லவ்வினா

2 முறை ஆசிய சாம்பியனான தீ தாமை இந்தியா வீராஙகனை நீக்காத் ஷாரினை எதிர்கொள்ள உள்ளார். இந்தப் போட்டி ஞாயிற்றுகிழமை 7 மணிக்கு நடைபெறுகிறது. மற்றொரு போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா ஆஸ்திரேலிய வீராங்கனை பார்க்கரை எதிர்கொள்ள உள்ளார். இந்த தொடரில் மொத்தம் 65 நாடுகளை சேர்ந்த 324 குத்துச் சண்டை வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்த தொடருக்கு மொத்தமாக 20 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது

Story first published: Saturday, March 25, 2023, 22:23 [IST]
Other articles published on Mar 25, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+