Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்.. இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம்.. நிகத் ஜரீன், லவ்வினா அபார சாதனை

மும்பை : மகளிருக்கான உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணிக்கு இன்று மேலும் 2 தங்கம் கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்த தொடரில் இந்தியா 4 பதக்கங்களை வென்றுள்ளது.

50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை நிகத் ஜரீனா இறுதிப் போட்டியில் 2 முறை ஆசிய சாம்பியனான வியாட்நாம் வீராங்கனை நிகுயேன் தி தாமை எதிர்கொண்டார்.

இதில் 5க்கு0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற நிகத் ஜரீன் , தொடர்ந்து 2வது முறையாக உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியது.

நிகத் ஜரீனுக்கு 2வது தங்கம்

நிகத் ஜரீனுக்கு 2வது தங்கம்

இதன் மூலம் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மேரி கோம்க்கு பிறகு அதிக தங்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார். இது குறித்து பேசிய தொடர்ந்து 2வது முறையாக தங்கம் வென்றது, அதுவும் வேறு ஒரு பிரிவில் தங்கம் வென்று இருக்கிறேன்.

கடினமான போட்டி

கடினமான போட்டி

இந்த தொடரில் நான் விளையாடியதில் மிகவும் கடினமாக போட்டி இது தான். என்னுடைய முழு சக்தியையும் திரட்டி விளையாடினேன். இந்த போட்டி ஒரு ரோலர் கோஸ்டர் போல் அமைந்தது. இருவரும் நடுவரிடம் வார்னிங் பெற்றோம். தொடர்ந்து அதிரடியாக ஆட வேண்டும் என்று நினைத்தேன்.

லவ்லினா தங்கம்

லவ்லினா தங்கம்

இறுதியில் என்னுடைய கையை நடுவர் உயர்த்திய போது தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் என்று நிகத் ஜரீன் கூறியுள்ளார். இதே போன்று மற்றொரு இறுதி சுற்றில் 75 கிலோ எடைப் பிரிவில் ஆஸ்திரேலிய வீரர் கெயிட்லின் பார்கரை வீழ்த்தி முதல் முறையாக தங்கப் பதக்கத்தை லவ்லினா வென்று இருக்கிறார்.

யுத்தியில் மாற்றம்

யுத்தியில் மாற்றம்

கெயிட்லின் பார்கர் 2 முறை தங்கப் பதக்கம் லல்வினா ஏற்கனவே 2 முறை வெண்கலப் பதக்கத்தை வென்று இருக்கிறார். நாட்டுக்காக முதல் முறை தங்கம் வென்று இருப்பது பெருமையாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள லவ்வினா, இறுதிப் போட்டிக்காக எங்களுடைய ஆட்டத்தின் யுத்தியை மாற்றியதாக கூறினார். முதல் 2 சுற்றில் முன் கால் வைத்து விளையாடி, கடைசி சுற்றில் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் கூறினார்.

Story first published: Sunday, March 26, 2023, 23:16 [IST]
Other articles published on Mar 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+