Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டையில் இந்தியாவின் ஷிவ தாபா தோல்வி!

ரியோ: ரியோ ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டைப் போட்டியில் (56 கிலோ) இந்தியாவின் ஷிவ தாபா கியூபாவின் ரொபெய்சி ராமிரெஸிடம் தோல்வியடைந்தார். இதன் மூலம் ஒலிம்பிக்ஸில் இருந்து ஷிவ தாபா வெளியேறினார்.

ரியோ ஒலிம்பிக்ஸ் குத்துச் சண்டைப் போட்டியின் 56 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் ஷிவ தாபா, கியூபாவின் ரொபெய்சி ராமிரெஸை எதிர்கொண்டார்.

Indian Boxer Shiva Thapa bows out after loss to 2012 gold medalist Robeisy Ramirez

இந்த போட்டியில் தொடக்கம் முதலே கியூபா வீரர் ரொபெய்சி ராமிரெஸ் ஆதிக்கம் செலுத்தினார். இதனால், ரொபெய்சி ராமிரெஸ் 30-25 என்ற புள்ளிகளை பெற்று முதல் ரவுண்டில் முன்னிலை வகித்தார். பின்னர் 2-வது மற்றும் 3-வது ரவுண்டிலும் அவரது ஆதிக்கமே தொடர்ந்தது.

இறுதியில் 3-0 (30-25, 30-27, 30-27) என்ற கணக்கில் கியூபா வீரர் ரொபெய்சி ராமிரெஸ், இந்திய வீரர் ஷிவ தாபாவை வீழ்த்தினார். இதன் மூலம் ஒலிம்பிக்ஸில் இருந்து ஷிவ தாபா வெளியேறினார்.

கியூபா வீரர் ரொபெய்சி ராமிரெஸ் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டைப் போட்டியில்(52 கிலோ) தங்கப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, August 12, 2016, 12:10 [IST]
Other articles published on Aug 12, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+