Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மூக்கு பொடப்பா இருந்தா.. இப்படித்தான் யோசிக்கத் தோணும்.. ஜுவாலா கட்டாவின் காமெடி

ஹைதராபாத்: விளையாட்டுப் போட்டிகள் இல்லாமல் போனதாலும், நாடே லாக்டவுனில் முடங்கிப் போயிருப்பதாலும் ஜுவாலா கட்டாவுக்கும் ரொம்பப் போரடித்துப் போய் விட்டது போல.. மொபைல் ஆப் விளையாட்டில் குதித்து விட்டார்.

பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா படு போல்டானவர். எதார்த்தமானவர். மனதில் பட்டதைப் பேசி விடுவார்.. அதுவும் பட்டென்று தேங்காய் உடைப்பது போல. இதனாலேயே அவரிடம் நெருங்கவே பலரும் அஞ்சுவர். ஆனால் மனசுக்குள் அவர் பூ மாதிரிங்க. அன்பைக் கொட்டுவதிலும் அவருக்கு நிகர் அவரே.

இப்பக் கூட பாருங்க லாக்டவுனால் பாதிக்கப்பட்ட பல ஏழைகளுக்கும், இடம் பெயர்ந்து வந்து தங்கியிருப்போருக்கும் நிறைய உதவிகளை அவர் செய்துள்ளார். அவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கிறார்.

உசுப்பேத்தும் ஜுவாலா கட்டா

உசுப்பேத்தும் ஜுவாலா கட்டா

என்னதான் செய்தாலும், அவருக்கும் கூட இந்த லாக்டவுன் போரடிக்கத்தான் செய்கிறது. அதை அவ்வப்போது வெளிப்படுத்தவும் அவர் தவறுவதில்லை. பழைய நினைவுகளை கிளறி விட்டு அதில் மூழ்கி விடுகிறார். அவ்வப்போது. காதலரும், நடிகருமான விஷ்ணு விஷாலுடன் எடுத்த படங்களை அவ்வப்போது போட்டு பார்த்தியா.. ஞாபகம் இருக்கா என்று கேட்டு அவரையும் உசுப்பேத்தி விட்டு விடுகிறார்.

மிஸ் யூ கேர்ள்ஸ்

மிஸ் யூ கேர்ள்ஸ்

அதேபோல தனது தோழிகளைப் பார்க்க முடியாமல் தவிப்பதை போட்டோ போட்டு மிஸ் யூ கேர்ள்ஸ் என்று உருகினார். தோழிகளைப் பார்க்காமல் யாருக்குத்தான் இருக்க முடியும். உண்மையில் யோசித்துப் பார்த்தால் இந்த லாக்டவுன் நம்மை குடும்பத்தோடு கட்டிப் போட்டு வைத்துள்ளது. அதேசமயம் நமது நட்புகள், உறவுகளை தூற வைத்துள்ளதைப் பாருங்களேன்.

முக பாவனை சூப்பர்

முக பாவனை சூப்பர்

இடையில் ரொம்ப கடுப்பாகி, போரடிச்சுப் போய், ஜிப்பரிஷில் குதித்தார். முடிந்தவரை சரியான விடையைக் கண்டுபிடிக்க முயற்சித்தார். முயற்சித்தார் என்பதை விட அவர் காட்டிய முக மேனரிசங்கள்தான் ரொம்பப் பாப்புலராகின. அதை பலரும் வைரல் செய்தனர். கடைசியில் சரியான விடையையும் கண்டுபிடித்தார். அதற்காக அவரைப் பாராட்டலாமே.

Recommended Video

ஜுவாலா கட்டாவின் ஜிப்பரிஷ் சேலஞ்ச்.. முக பாவனை சூப்பர் - வீடியோ
அழகான நாய்க்குட்டி

அழகான நாய்க்குட்டி

இப்போது மொபைல் ஆப் விளையாட்டில் குதித்துள்ளார். தனது முகத்தை அழகான நாய்க்குட்டி போல மாற்றி காட்டி வேடிக்கை காட்டியுள்ளார். நாக்கை வேறு சுழற்றி ஸ்டைல் காட்டியுள்ளார். பார்க்கவே படு க்யூட்டாக வேடிக்கையாக இருக்கிறது. ஹேய் என்று கேப்ஷன் வேறு. கண்ணை விரித்து பயமுறுத்துவது போல காட்டுகிறார்.. நமக்கு என்னவோ வடிவேலு காமெடிதான் நினைவுக்கு வருது.. மூக்கு புடைப்பா இருந்தா இப்படித்தான் யோசிக்கத் தோணும் போல!

Story first published: Thursday, May 14, 2020, 11:03 [IST]
Other articles published on May 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+