Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Exclusive: விளையாட்டு ஃபர்ஸ்ட்.. நோ ரெஸ்ட்.. ஆசிய சாம்பியன் மேரிகோம் சிறப்பு பேட்டி!

டெல்லி: ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மேரிகோம் குத்துச்சண்டையில் இருந்து இப்போதைக்கு ஓய்வு பெறமாட்டேன் என கூறியிருக்கிறார். மேலும் இன்னும் நிறைய போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் குறிப்பிட்டு இருக்கிறார்.

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரிகோம் நேற்று தங்கப்பதக்கம் வென்றார்.

இதன் மூலம் இவர் 5 வது முறையாக ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று இருக்கிறார்.

 பிரத்யேக பேட்டி

பிரத்யேக பேட்டி

கடந்த ஐந்து வருடங்களாக 51 கிலோ எடை பிரிவில் விளையாடிய இவர் தற்போது மீண்டும் 48 கிலோ எடை பிரிவில் விளையாடினார். இந்த நிலையில் இந்த வெற்றிக்கு பின் மேரி கோம் 'ஒன்இந்தியாவுக்கு' அளித்த பிரத்யேக பேட்டியில் சில விஷயங்களை குறிப்பிட்டார்.

 ஓய்வு இல்லை

ஓய்வு இல்லை

அப்போது அவர் தனது ஓய்வு திட்டம் குறித்து தெரிவித்தார். அதில் ''நான் இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணத்தில் இல்லை. அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடக்கும் காமன்வெல்த் போட்டியில் கண்டிப்பாக விளையாடுவேன். அதற்கு இடையில் நடக்கும் சிறுசிறு போட்டிகளிலும் விளையாடுவேன்'' என்றும் கூறினார்.

 பழைய முறை

பழைய முறை

மேலும் அவர் தனது பழைய போட்டி முறைக்கே திரும்பி சென்று இருக்கிறார். இதுகுறித்தும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார். அதில் ''நான் சில வருடங்கள் 51 கிலோ எடை பிரிவில் விளையாடினேன். ஆனால் அது எனக்கு ஏற்றதில்லை. உடல் வலியை கொடுத்தது. தற்போது அதனால் மீண்டும் பழைய 48கிலோ எடை பிரிவுக்கே திரும்பிவிட்டேன்'' என்று குறிப்பிட்டார்.

 மூன்று குழந்தைகள் தாய்

மூன்று குழந்தைகள் தாய்

அதேபோல் அவர் தனது பயிற்சி முறைகள் குறித்தும் இந்த பேட்டியில் குறிப்பிட்டார். அதன்படி ''நான் என்னுடைய 24, 25 வயதில் செய்ததை போல இப்போது பயிற்சி செய்ய முடியாது. என்னுடைய பயிற்சி முறை நிறையவே மாறிவிட்டது. மேலும் எனக்கு இப்போது 34 வயது. நான் மூன்று குழந்தைகளுக்கு அம்மா. அதற்கு ஏற்ற மாதிரி தற்போது பயிற்சி செய்கிறேன்'' என்று கூறினார்.

Story first published: Saturday, November 11, 2017, 6:31 [IST]
Other articles published on Nov 11, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+