Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நானும் “சேரி”க்காரன் தான்.. சொல்கிறார் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன்

மும்பை : பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இந்தியா வந்துள்ளார். இந்தியாவில் நடைபெற உள்ள தற்காப்புக் கலை லீக்-ஐ தொடங்கி வைக்க வந்துள்ளார் அவர்.

நேற்று அவர் கொடுத்த பேட்டியின் போது, சில விஷயங்களை மனம் திறந்து பகிர்ந்து கொண்டார். அப்போது நான் சேரியில் இருந்து வந்து தான் பாக்ஸராக மாறினேன் என கூறினார்.

மேலும் மும்பையின் சேரிப் பகுதிகளை பார்வையிட உள்ளதாக கூறினார் அவர். மைக் டைசன் தற்போது போட்டிகளில் பங்கேற்பதில்லை. எனினும், அவர் பங்கேற்ற காலங்களில் பல சர்ச்சைகளில் சிக்கியவர்.

மும்பையின் சேரிப் பகுதிகள்

மும்பையின் சேரிப் பகுதிகள்

இந்தியாவின் மும்பை என்றால் அமெரிக்காவில் "ஸ்லம்" (Slum) என பதிவாகி விட்டது. அதற்கு காரணம் "ஸ்லம்டாக் மில்லியனர்" திரைப்படம் தான். அந்த படத்தில் மும்பையின் சேரிப் பகுதியான தாராவியை மையமாக வைத்து படம் நகரும். அந்த படம் ஆஸ்கார் விருதுகள் வென்றதோடு, அமெரிக்காவில் மிகப் பிரபலமாக மாறி விட்டது. அதில் இருந்து மும்பை என்றாலே "சேரி" என்பது போல பதிந்து விட்டது.

நான் சேரியில் இருந்தவன்

நான் சேரியில் இருந்தவன்

இந்த நிலையில், மைக் டைசன் தற்போது மும்பையில் இருப்பதால் அங்குள்ள சேரிப் பகுதியை பற்றி குறிப்பிட்டார், அப்போது தானும் சேரிப் பகுதியில் இருந்து வந்தவன். அங்கேயே வளர்ந்தவன் தான் என கூறினார்.

சேரியில் இருந்து வந்தவர்கள்

சேரியில் இருந்து வந்தவர்கள்

அங்கிருந்து வெளியேற வேண்டும் என நினைத்தேன். அதனால் தான் இப்போது இங்கே இருக்கிறேன் என குறிப்பிட்டார், முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசன். மேலும், அதிக ஏழையாக இருந்தால் நல்ல பாக்ஸராக நீங்கள் இருப்பீர்கள் என நினைக்கிறேன். மிக சிறப்பான குத்துச்சண்டை வீரர்கள் எல்லோரும் சேரியில் இருந்து வந்தவர்கள் தான் எனவும் கூறினார்.

சேரியை பார்க்க போறேன்

சேரியை பார்க்க போறேன்

தற்காப்புக் கலை போட்டிகளின் துவக்க விழா முடிந்தவுடன் மும்பையில் இருக்கும் சேரிப் பகுதியை பார்வையிட உள்ளதாக கூறினார் மைக் டைசன். மும்பையின் தாராவி பகுதி தான் ஆசியாவின் மிகப்பெரிய சேரிப் பகுதி என கருதப்படுகிறது. அங்கே 20 லட்சம் மக்கள் வரை வசித்து வருகிறார்கள்.

Story first published: Saturday, September 29, 2018, 16:27 [IST]
Other articles published on Sep 29, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+