52 வயசு.. சற்றும் குறையாத வேகம்.. அது தான் மைக் டைசன்.. வைரலாகும் மின்னல் வேக வீடியோ!
நியூயார்க் : பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் ஓய்வு பெற்று 13 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில், அவர் சமீபத்தில் காற்றில் குத்து விட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு பாரில் இரண்டு நபர்களுக்கு குத்துச்சண்டை நுணுக்கங்கள் குறித்து கூறிக் கொண்டு இருந்த மைக் டைசன், தான் குத்துச்சண்டை செய்வது போலவே செய்து காட்டினார்.
என்ன வேகம்!
அப்போது, அவர் காற்றில் குத்து விட்ட வேகமும், எதிராளி தாக்கினால் எப்படி விலகுவது, அடுத்து எப்படி அவரை தாக்குவது என செய்து காட்டிய வேகமும் பிரமிக்க வைத்தது.

வைரல் வீடியோ
இந்த வீடியோவை சுமார் 23 லட்சம் மக்கள் பார்வையிட்டுள்ளனர். மேலும், மைக் டைசனுக்கு இணையாக இப்போது உச்சத்தில் இருக்கும் எந்த வீரரையும் ஒப்பிட முடியாது என கூறி வருகின்றனர் குத்துச்சண்டை பிரியர்கள்.

டைசனின் மின்னல் வேகம்
தற்போது 52 வயது ஆகும் மைக் டைசன், தளர்ந்து போய் இருப்பார் என நினைத்தால், நாம் ஏமாந்து விடுவோம். அந்தளவிற்கு மின்னல் வேகத்தில் இருக்கிறார் டைசன்.

நாக் அவுட் மன்னன்
மைக் டைசன் 2000வது ஆண்டில் லூ சாவரீஸ் என்ற வீரரை வெறும் 38 வினாடிகளில் வீழ்த்தியது நினைவில் இருக்கலாம். மைக் டைசன் சுமார் 44 நாக் அவுட் வெற்றிகள் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications