Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Mike Tyson-தோற்றாலும், எனக்கு இது வெற்றி தான்! செத்து பிழைத்து மீண்டும் பாக்சிங்கிற்கு வந்தேன்-டைசன்

டல்லாஸ் : பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் ஜாக்பாலுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து தனது மவுனத்தை முதல்முறையாக கலைத்திருக்கிறார். 58 வயதான மைக் டைசன் முகமது அலிக்கு பிறகு குத்துச்சண்டை வரலாற்றில் மிகவும் பிரபலமான சிறந்த வீரராக விளங்கி வருகிறார்.

இந்த நிலையில் 27 வயதான சமூக வலைத்தள நட்சத்திரமும் குத்துச்சண்டை வீரருமான ஜாக் பால் சண்டைக்கு அழைத்து இருந்தார். இதை அடுத்து இந்த குத்துச்சண்டை போட்டி டல்லாஸ் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.

mike tyson jake paul

அந்தப் போட்டி நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரலை செய்யப்பட்டது. ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான மக்கள் netflix- ஐ பயன்படுத்தி இந்த போட்டியை பார்த்ததால் netflix சர்வரே பாதிக்கப்பட்டது. 58 வயதான மைக் டைசன் நாக் அவுட் ஆகி விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போட்டி முழுவதும் அவர் ஜாக்பாலுக்கு கருஞ்சிறுத்தை போல் நின்று கடும் நெருக்கடி கொடுத்தார்.

எனினும் புள்ளிகள் கணக்கில் ஜாக்பால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த தோல்வி குறித்து முதல்முறையாக மைக் டைசன் மௌனத்தை கலைத்திருக்கிறார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தப் போட்டியில் நான் தோல்வி அடைந்தாலும் வெற்றி பெற்றதாகவே நினைக்கின்றேன்.

அப்படி ஒரு சூழலில் தான் நான் இருக்கின்றேன். நேற்று நடைபெற்ற குத்து சண்டை போட்டியில் நான் கலந்து கொண்டதற்கு என்றும் நன்றி உணர்வுடன் இருக்கின்றேன். நான் குத்துச்சண்டை களத்திற்கு கடைசியாக திரும்பியதை நினைத்து எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. கடந்த ஜூன் மாதம் நான் கிட்டத்தட்ட செத்துப் பிழைத்தேன். எனக்கு எட்டு முறை ரத்தம் மாற்றப்பட்டது.

என்னுடைய பாதி ரத்தத்தை நான் இழந்தேன். அது மட்டும் இல்லாமல் மருத்துவமனையில் இருக்கும் போது 11 கிலோ வரை என்னுடைய எடையை இழந்தேன். இப்படி இருந்த சூழலில் இருந்து மீண்டும் உடல் நலம் தேறி குத்துச்சண்டை போட்டியில், நான் பங்கேற்று இருக்கிறேன். இதனால் இது எனக்கு வெற்றியாக தான் நான் கருதுகின்றேன்.

என்னுடைய வயதில் பாதி கூட இல்லாத ஒரு வீரருடன் நான் முழுமையாக எட்டு சுற்றுகள் வரை நின்று குத்துச்சண்டையில் ஈடுபட்டதை என்னுடைய குழந்தைகள் பார்த்து ரசித்ததை எந்த ஒரு மனிதருக்கும் கிடைக்காத மிகப்பெரிய வரமாக நான் இதனை கருதுகிறேன். ரசிகர்களுக்கு என்னுடைய நன்றி என்று மைக் டைசன் பதிவிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள ஜாக் பால், உங்களுடன் மோதியது எனக்கு கிடைத்த கௌரவம் நீங்கள் எங்களுக்கெல்லாம் ஒரு முன்னோடி! உங்களை நாங்கள் நேசிக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

Story first published: Sunday, November 17, 2024, 9:34 [IST]
Other articles published on Nov 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+