Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக்- இந்திய குத்துச்சண்டை குழுவினருக்கு மேகி மட்டும் தான் சாப்பாடு.. கொதித்து எழும் ரசிகர்கள்

பாரிஸ் : பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பாக சென்றுள்ள குத்துச்சண்டை குழுவினருக்கு போதிய உணவு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த ஆறு வீரர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். இதில் நான்கு பேர் மகளிர் குத்துச்சண்டையில் பங்கேற்க உள்ளனர்.

இதுவரை நடைபெற்ற குத்துச்சண்டை பிரிவில் அமித் மற்றும் ஜாஸ்மின் ஆகியோர் தொடர்ந்து வெளியேறிய நிலையில் மற்ற நான்கு இந்தியர்களும் களத்தில் நிற்கிறார்கள். இந்த நிலையில் இந்த ஆறு வீரர்களுக்கும் மூன்று பயிற்சியாளர்கள் ஒரு பிசியோ மற்றும் ஒரு மருத்துவர் ஆகியோர் சென்றிருக்கிறார்கள்.

Olympics 2024 boxing 2024

இந்த நிலையில் இந்த வீரர்கள் அனைவரும் ஒலிம்பிக் விளையாட்டு கிராமத்தில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் வெறும் ஆறு பேர் பங்கேற்று இருக்கும். இந்த போட்டியில் சுமார் 25 இந்திய குத்துச்சண்டை சமநிலை நிர்வாகிகள் பார்க்க பாரிஸ்க்கு சென்று உள்ளனர். மேலும் இந்த 25 நிர்வாகிகளும் பாரிஸில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

குத்துச்சண்டை சம்மேளனத்தின் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் நிர்வாகிகளின் வாக்குகளை வாங்குவதற்காக இந்த பாரிஸ் சுற்றுப்பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் வீரர்களுக்கு ஒரு நாளைக்கு 100 அமெரிக்க டாலர் வழங்கப்படுவதாகவும் இந்த காசை வைத்து இரண்டு வேளைக்கு கூட சாப்பாடு வாங்க முடியவில்லை என குத்துச்சண்டை குழுவினர் தரப்பில் புகார் எழுந்துள்ளது.

பாரிசில் உணவுப்பொருட்களின் விலை மிகவும் அதிகமாக இருப்பதாகவும், இதனால் வெறும் மேகி, பிரட் பட்டர் உள்ளிட்ட பொருட்களை வாங்கி அதனை சொந்தமாக சமைத்து சாப்பிடுவதாகவும் வீரர்களுடன் சென்ற குத்துச்சண்டை குழுவினர் தெரிவித்துள்ளனர்.

காலை உணவு மற்றும் ஹோட்டல் சார்பாக வழங்கப்படுவதாகவும் மதியம் மற்றும் இரவு உணவுக்கு தாங்கள் வெளியே சென்று பொருட்களை வாங்கிக் கொண்டுவந்து சமைத்து சாப்பிடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்திய வீரர்களுடன் சென்ற ஏழு பேர் கொண்ட குழுவில் நான்கு பேருக்கு மட்டும் ஒலிம்பிக் விளையாட்டு கிராமத்தில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மற்ற மூன்று பேர் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

Story first published: Wednesday, July 31, 2024, 22:07 [IST]
Other articles published on Jul 31, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+