For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

களமிறங்கும் முன்பே பதக்கம் உறுதி!

By Srividhya Govindarajan

சோபியா: ஐரோப்பிய குத்துச்சண்டை போட்டியான 69வது ஸ்டார்ன்ட்ஜா நினைவு குத்துச்சண்டை போட்டியில் களமிறங்கும் முன்பே, இந்தியாவின் சீமா புனியாவுக்கு பதக்கம் உறுதியானது. சீனியரான மேரி கோம், முதல் சுற்றில் வென்றாலே பதக்கம் உறுதி.

ஐரோப்பிய குத்துச்சண்டை போட்டியான, 69வது ஸ்டார்ன்ட்ஜா நினைவு குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவின் சோபியா நகரில் துவங்கியது. இந்த போட்டியில் மொத்தம் 94 மகளிர் மற்றும் 143 ஆண்கள் பங்கேற்கின்றனர்.

இதில் மகளிர் 81 கிலோவுக்கு மேற்பட்டோர் பிரிவில் பங்கேற்கும் இந்தியாவின் சீமா புனியாவுக்கு பதக்கம் உறுதியாகி உள்ளது. இந்தப் பிரிவில் மொத்தம் மூன்று பேர் மட்டுமே பங்கேற்கின்றனர். முதல் ஆட்டத்தில் பல்கேரியாவின் நிகலோவாவுடன் அவர் மோதுகிறார். அதில் வென்றால், பைனலுக்கு நேரடியாக தகுதிபெற்றுள்ள ரஷியாவின் அன்னா இவானோவாவை சந்திப்பார்.

சீமாவுக்கு இரண்டாவது முறை

சீமாவுக்கு இரண்டாவது முறை

கடந்தாண்டு நடந்த ஆசிய மகளிர் குத்துச்சண்டைப் போட்டியிலும் இதே நிலையில் சீமா இருந்தார். அதில் வெண்கலம் வென்றார்.

மேரி கோமுக்கும் பதக்கம்

மேரி கோமுக்கும் பதக்கம்

மகளிர் 48 கிலோ எடைப் பிரிவில் சீனியரான மேரி கோம், ஒரு வெற்றி பெற்றால், அவருக்கும் பதக்கம் உறுதி. ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் மற்றும் கடந்த மாதம் நடந்த இந்திய ஓபனில் தங்கம் வென்ற மேரி கோம் முழு பார்மில் உள்ளார்.

ரிப்பீட்டு ஆகுமா

ரிப்பீட்டு ஆகுமா

அவர் முதல் சுற்றில் ருமேனியாவின் ஸ்டலுடா டுடாவை சந்திக்கிறார். உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் மூன்று முறை வெள்ளி, ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் நான்கு முறை தங்கம் வென்றவர் டுடா.

உலக சாம்பியன்ஷிப்பில், 2006, 2008 மற்றும் 2010ல் அவர் வெள்ளி வென்றபோது, தங்கம் வென்றவர் மேரி கோம்.

சாதிப்பரா ஆண்கள்

சாதிப்பரா ஆண்கள்

ஆடவர் பிரிவில் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம், ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற சிவ தாப்பா, 60 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், கஜகஸ்தானின் குர்மதோவை சந்திக்கிறார். ஆசியப் போட்டியில் வெண்கலம் வென்ற சதீஷ் குமார், 91 கிலோ எடைப் பிரிவில் நேரடியாக கால் இறுதியில் விளையாடுகிறார்.

நேற்று இரவு நடந்த மகளிர் 60 கிலோ எடைப் பிரிவு ஆட்டத்தில் இந்தியவின் சரிதா தேவி, 3-2 என்ற கணக்கில் இத்தாலியின் கான்செகாவை வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.

Story first published: Tuesday, February 20, 2018, 13:49 [IST]
Other articles published on Feb 20, 2018
English summary
Title confirmed before bout for Seema Punia
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+