Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செம.. 2வது தங்கம்.. தட்டித் தூக்கிய இந்தியா.. ஆசிய குத்துச்சண்டை தொடரில் புதிய "ரெக்கார்டு"

துபாய்: ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர் சஞ்ஜீத் குமார் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில், ஆண்களுக்கான 91 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சஞ்சீத் 4-1 என்ற கணக்கில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற வாசிலி லிவிட்டை (கஜகஸ்தான்) வீழ்த்தி தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.

இதன் மூலம், 2 தங்கம் உட்பட 18 பதக்கங்களும் தனது முந்தைய சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது. கடந்த முறை இந்தியா 13 பதக்கங்கள் பெற்றிருந்தது.

 அப்பீல் நிராகரிப்பு

அப்பீல் நிராகரிப்பு

மேலும், 52 கிலோ எடைப்பிரிவின் இறுதிசுற்றில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் அமித் பன்ஹால் 2-3 என்ற கணக்கில் நடப்பு உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான ஷகோபிடின் ஜோய்ரோவிடம் (உஸ்பெகிஸ்தான்) தோல்வியுற்று வெள்ளிப்பதக்கம் பெற்றார். இந்த முடிவை எதிர்த்து இந்திய அணி தரப்பில் செய்யப்பட்ட அப்பீல் நிராகரிக்கப்பட்டது.

 துவம்சம் செய்து வெற்றி

துவம்சம் செய்து வெற்றி

அதேபோல், 64 கிலோ பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஷிவ தபா 2-3 என்ற கணக்கில் மங்கோலியாவின் பாதர்சுக் சின்ஜோரிக்கிடம் வீழ்ந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார். ஆசிய போட்டியில் ஷிவ தபா தொடர்ந்து வென்ற 5-வது பதக்கம் இதுவாகும். முன்னதாக, பெண்கள் பிரிவில் 75 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் பூஜாராணி 5-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் மாவ்லோனோவாவை துவம்சம் செய்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

 வெள்ளிப்பதக்கம்

வெள்ளிப்பதக்கம்

அதேபோல், 51 கிலோ பிரிவின் இறுதி ஆட்டத்தில் 6 முறை உலக சாம்பியனான இந்திய மூத்த வீராங்கனை மேரிகோம், கஜகஸ்தானின் நஸிம் கைஜாபாயை எதிர்கொண்டார். இதில், 2-3 என்ற கணக்கில் மேரி கோம் தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கமே வென்றார். இது ஒட்டுமொத்தமாக அவரது ஏழாவது பதக்கமாகும்.

 மிரட்டலான குத்து

மிரட்டலான குத்து

குத்துச்சண்டை போட்டிகளில் முதன் முறை அறிமுகமான Lalbuatsaihi (64 கிலோ) மற்றும் அனுபமா (81 + கிலோ) ஆகியோரும் இரண்டாம் இடம் பிடித்தனர். அதாவது, வெள்ளிப்பதக்கம் வென்றனர். இதில், Lalbuatsaihi 2-3 என்ற கணக்கில் தோற்றாலும், எதிரணி போட்டியாளரான மிலானா சஃப்ரோனோவாக்கு அவரது வாழ்நாளில் மறக்க முடியாத ஆட்டத்தை கொடுத்துவிட்டார். முன்னாள் உலக சாம்பியனான கஜகஸ்தானின் லாசாத் குங்கீபாயேவாவுக்கு எதிராக மோதினார் அனுபமா. இதில், குங்கீபாயேவா 3-2 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றார். தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.7 லட்சமும், வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியவர்களுக்கு ரூ.3½ லட்சமும் பரிசாக வழங்கப்பட்டது.

 மகளிரணி பெஸ்ட்

மகளிரணி பெஸ்ட்

ஒட்டுமொத்தமாக, இந்திய மகளிர் அணி ஒரு தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என 10 பதக்கங்களை வென்றது. பூஜா ராணி(75 கிலோ) தங்கம், மேரி கோம் (51 கிலோ), லால்புட்சாஹி (64 கிலோ), அனுபமா (81 கிலோ) ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினர். இந்திய வீராங்கனைகள் சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ), லோவ்லினா போர்கோஹெயின் (69 கிலோ), ஜாஸ்மின் (57 கிலோ), சாக்ஸி சவுத்ரி (54 கிலோ), மோனிகா (48 கிலோ), சாவித்ரி (81 கிலோ) ஆகிய வீராங்கனைகள் வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.

Story first published: Tuesday, June 1, 2021, 13:07 [IST]
Other articles published on Jun 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+