Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"நெஞ்செலும்பு நட்டுக்கிச்சு".. இப்படியும் இனி நீங்க கமெண்ட்ரி கேட்கலாம்.. WWE தமிழில் - செம!

மும்பை: தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது போல இனி உங்கள் வீடுகளில் வார்த்தைகள் ஒலிக்கலாம். ஆம்.. ரெஸ்ட்லிங் என்று அழைக்கப்படும் மல்யுத்தத்தை தமிழில் அறிமுகம் செய்கிறது சோனி நிறுவனம்.

இந்தியாவில், கிரிக்கெட்டுக்கு பிறகு அதிகம் பார்க்கப்படும் விளையாட்டு தொடர்பான ஒரு பொழுபோக்கு அம்சம் என்றால் அது மல்யுத்தம் எனலாம்.

குறிப்பாக 90'ஸ் கிட்ஸ் இதற்கு அடிமை. Rock செஸ்ட் எவ்ளோ, அண்டர் டேக்கர் வெயிட் எவ்ளோ, கேன் 'Bicesps' எவ்ளோ கார்டுகள் வைத்து விளையாடாத 90'ஸ் கிட்ஸ் இருக்க முடியாது.

தமிழ் கமெண்ட்ரி

தமிழ் கமெண்ட்ரி

இப்போது அந்த மல்யுத்தத்தை பிராந்திய மொழிகளில் இன்னும் பிரபலப்படுத்த தயாராகிவிட்டது சோனி. முதன் முறையாக மல்யுத்த போட்டிகளை தமிழ் வர்ணனையுடன் ஒளிபரப்பவிருக்கிறது. இதற்கான முறையான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. சோனி நிறுவனத்தின், 'சோனி டென் 4' சேனல் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் மல்யுத்தம் போட்டிகள் வர்ணனை செய்யப்பட உள்ளன.

முதன் முறையாக

முதன் முறையாக

ஆங்கிலம் தவிர்த்து இந்தி, பெங்காலி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 5 மொழிகளில் மல்யுத்தம் கமெண்ட்ரி செய்யப்படுகிறது. கிரிக்கெட், கால்பந்து என்று சில பல விளையாட்டு போட்டிகள் தமிழில் கமெண்ட்ரி செய்து பார்த்திருக்கிறோம். இப்போது முதன் முறையாக, மல்யுத்தம் தமிழில் வர்ணனை செய்யப்படுகிறது. பொய்யோ.. உண்மையோ.. ஒருவரை ஒருவர் கன்னாபின்னாவென்று போட்டு அடித்து, மிதிப்பது தான் இப்போட்டியின் சுவாரஸ்யம் (!?). ரசிகர்கள் அதைத் தான் ரசிக்கிறார்கள்.அப்படியெனில் எப்படி தமிழில் வர்ணனை செய்வார்கள் என்று நினைத்தாலே கலக்கமாக உள்ளது.

பாகுபலி ராணா

பாகுபலி ராணா

அதில், சில சாம்பிள்களை இங்கு பார்ப்போம்.. அல்லாக்க போட்டு மல்லாக்க மிதித்தார், அக்குளில் சொருவில் பக்குல்ஸை உடைத்தார், நெஞ்செலும்பு நட்டுக்கிச்சு, மூஞ்சு முகர பேந்திடுச்சு, கர்லா கட்ட கையால் கைமா பண்ணிவிட்டார் என்பது போன்ற வார்த்தைகளை கூட நீங்கள் கேட்டாலும் கேட்கலாம். இதில், ஒரு ஸ்பெஷல் மேட்டர் என்னன்னா, தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் மல்யுத்தம் வர்ணனைகளை மார்க்கெட்டிங் செய்ய நியமிக்கப்பட்டுள்ளனர் நம்ம "பாகுபலி" புகழ் ராணா தான்.

இந்தியா vs இங்கிலாந்து

இந்தியா vs இங்கிலாந்து

அதுமட்டுமின்றி, முதலாவதாக EURO கால்பந்து போட்டியும், கோபா அமெரிக்கா போட்டியும் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இதில் ஜூன் 11ம் தேதி தொடங்கும் EURO கால்பந்து தொடர் 6 மொழிகளில் ஒளிபரபரப்பு செய்யப்படுகிறது. மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணமும் தமிழ் கமெண்ட்ரியுடன் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

Story first published: Thursday, June 3, 2021, 21:50 [IST]
Other articles published on Jun 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+