Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய பெண்கள் குத்துச்சண்டை போட்டி: 3 இந்தியர்கள் அரையிறுதிக்கு முன்னேற்றம்

உலன் பால்டோர்: ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவை சேர்ந்த பிங்கி, ஜங்க்ரா, சோனியா லாதர், சரிதா தேவி ஆகியோர் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மங்கோலியா தலைநகர் உலான்பாடர் நகரில் பெண்களுக்கான 6வது ஆசிய குத்துச் சண்டை போட்டி நடைபெறுகிறது. இதில் நேற்று நடைபெற்ற காலுறுதிப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற 3 இந்திய வீராங்கணைகள் அரையிறுதி போட்டிக்கு தகுதிப் பெற்றனர்.

48 கிலோ பிரிவில் இந்தியாவின் பிங்கி ஜங்க்ரா, கஜகஸ்தானின் தினா லியுபயோவா ஆகியோர் மோதினர். இதில் முதல் 2 சுற்றுகளில் இருவரும் சமநிலையில் இருந்தனர். 3வது சுற்றில் 10-6 என்று முன்னேறிய பிங்கி ஜங்க்ரா இறுதிச் சுற்றில் கடும் தாக்குதல் நடத்தினார். இதன்மூலம் போட்டியின் இறுதியில் 17-8 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியாவின் பிங்கி ஜங்க்ரா வெற்றிப் பெற்றார். இதனையடுத்து அரையிறுதி போட்டியில் பிங்கி ஜங்க்ரா, சீனாவின் யுஜி லுயோவை சந்திப்பார்.

54 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சோனியா லாதர், இலங்கையின் விதுஷிகா பிரபதி மோஹட் ஆகியோர் மோதினர். இப்போட்டியில் துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சோனியா லாதர் 24-5 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிப் பெற்றார். இதனையடுத்து அரையிறுதி போட்டியில் சோனியா லாதர், கஜகஸ்தானின் குல்ஷான் அகிமோவா உடன் மோத உள்ளார்.

60 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சரிதா தேவி, கஜகஸ்தானின் குல்சாய்னா உபினியாசோவா ஆகியோர் மோதினர். முதல் சுற்றில் 6-2 என்ற முன்னேறிய சரிதா தேவி, 2வது சுற்றில் 12-5 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகித்தார். 3வது சுற்றின் முடிவில் 23-11 என்ற கணக்கில் சரிதா தேவி வெற்றிப் பெற்றார். இதன்மூலம் அரையிறுதிப் போட்டியில் முன்னேறிய சரிதா தேவி, சீனாவின் சின்டோங் உடன் மோத உள்ளார்.

64 கிலோ எடை பிரிவில் கடைசி வரை கடுமையாக போராடிய இந்தியாவின் மீனா ராணி, மங்கோலியாவின் எர்டெனிசோயோலிடம் 11-13 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியை தழுவினார்.

Story first published: Thursday, March 22, 2012, 14:18 [IST]
Other articles published on Mar 22, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+