ஹெராயின் கடத்தல் விவகாரம்: குத்துச் சண்டை வீரர் ராம்சிங் கைது!

பஞ்சாப் மாநிலம் சண்டிகரின் புறநகர் பகுதியில் போதைப் பொருள் விற்பனையாளர் அனூப்சிங் கலோன் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்சிங்கும், அவரது நண்பரும் குத்துச்சண்டை வீரருமான ராம்சிங்கும் பல முறை தம்மிடம் ஹெராயின் போதைப்பொருளை வாங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
பின்னர் ராம்சிங்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தாம் 5 முறை ஹெராயின் உட்கொண்டதாக போலீசாரிடம் ஒப்புக் கொண்டார். இந்நிலையில் ராம்சிங்கை பஞ்சாப் போலீசார் நேற்று இரவு அதிரடியாக கைது செய்தனர். விஜேந்தர்சிங் 12 முறை ஹெராயின் உட்கொண்டதாக ராம்சிங் ஏற்கெனவே கூறியிருந்தார். தற்போது ராம்சிங் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் விஜேந்தர் சிங்குக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
Story first published: Thursday, April 4, 2013, 10:20 [IST]
Other articles published on Apr 4, 2013


Click it and Unblock the Notifications