12 முறை ஹெராயின் வாங்கியுள்ளார் விஜேந்தர் சிங் - பஞ்சாப் போலீஸ்

கனடாவைச் சேர்ந்த என்ஆர்ஐ டீலர் அனூப் கலோனிடமிருந்து இந்த ஹெராயினை அவர் வாங்கியுள்ளார் என்றும் பஞ்சாப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், கடந்த டிசம்பர் மாதத்தில் விஜேந்தருக்காக அவரது பார்ட்னர் ராம்சிங் , ஹெராயினை வாங்கினார். பின்னர் கலோனின் வீட்டுக்கு அடிக்கடி இரு குத்துச் சண்டை வீரர்களும் போய் ஹெராயின் வாங்கியுள்ளனர். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இது நடந்துள்ளது.
மொத்தம் 12 முறை விஜேந்தர் சிங் ஹெராயின் வாங்கியுள்ளார். சொந்த உபயோகத்திற்காக இதை வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல் பரிமாற்றம் விஜேந்தரின் செல்போனிலிருந்து கிடைத்துள்ளது. 80 முறைக்கும் மேலாக கலோனுடன் பேசியுள்ளார் விஜேந்தர் என்று போலீஸார் கூறியுள்ளனர்.
Story first published: Monday, April 1, 2013, 9:19 [IST]
Other articles published on Apr 1, 2013


Click it and Unblock the Notifications