பாக்சிங்-காலிறுதி்க்கான முதல் சுற்றில் ஜிதேந்தர் குமார்
{image-Jitender Kumar250_12082008.jpg tamil.mykhel.com}பெய்ஜிங்: இந்திய குத்துச் சண்டை வீரர் ஜிதேந்தர் குமார் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய போட்டிக்கான தகுதிச் சுற்றில் நுழைந்துள்ளார்.
துருக்கியின் உலாய் பர்கன் மெமிஸை அவர் 3 சுற்றுகளில் 12-3 என்ற கணக்கில் தோற்கடித்து இந்த நிலைக்கு முன்னேறினார்.
ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றவரான ஜிதேந்தருக்கு இது முதல் ஒலிம்பிக் போட்டியாகும்.
முதல் சுற்றில் 5-0 என்ற கணக்கில் மெமிஸை வென்ற குமார் இரண்டாவது சுற்றில் 9-2 என்ற புள்ளிகளை அடைந்தார். இறுதியில் 12-3 புள்ளிகளில் மெமிஸை தோற்கடித்தார்.
இவரும் அவினவ் பிந்த்ராவைப் போலவே ஹரியாணாவைச் சேர்ந்த வீரர் ஆவார்.
ஏற்கனவே மிடில் வெயிட் பிரிவி்ல் இந்தியாவின் விஜயேந்தரும் காலிறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011

Click it and Unblock the Notifications