Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குத்துச்சண்டை வீரர்களுக்கு அளிக்கப்பட்ட 'கிப்ட்' திருட்டு

குவஹாத்தி: குவஹாத்தியில் நடந்த நான்காவது ஆசிய குத்துச் சண்டை சாம்பியன் போட்டியின் தொடக்க விழாவின்போது இந்திய வீரர்கள் விஜேந்தர் சிங், ஜிதேந்தர் சிங், அகில்குமார் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட பரிசுப் பொருட்களை யாரோ திருடிச் சென்று விட்டனர்.

குவஹாத்தியில் 4வது ஆசிய குத்துச்சண்டைப் போட்டி தொடங்கியுள்ளது. இதன் தொடக்க விழாவில் ஒலிம்பிக் வீரர்களான விஜேந்தர் சிங், ஜிதேந்தர் சிங், அகில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் 3 வீரர்களும் அஸ்ஸாம் மாநில அரசால் கெளரவிக்கப்பட்டனர்.

அப்போது அஸ்ஸாம் மாநில பாரம்பரியப் பொருட்களான சராய், ஜப்பி, கமோஷா ஆகியவை அவர்களுக்கு பரிசாக அளிக்கப்பட்டது.

விழா முடிந்த பின்னர் 3 பேரும் ஹோட்டலுக்குத் திரும்பினர். அங்கு போன பின்னர்தான் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பரிசுப் பொருட்களைக் காணவில்ைல என்று தெரிய வந்தது.

இதையடுத்து விழா ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து போலீஸில் புகார் தரப்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற விஜேந்தர் சிங்குக்கு, அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகாய் ரூ. 5 லட்சம் பரிசளித்து கெளரவித்தார்.

Story first published: Wednesday, December 7, 2011, 17:15 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+