For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக் குத்துச் சண்டை: விகாஷ் கிருஷ்ணன் வென்றதாக அறிவிக்கப்பட்டது ரத்து

By Mathi
லண்டன்: லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச் சண்டையில் 69 கிலோ எடைப் பிரிவில் தகுதிச் சுற்றில் இந்தியாவின் விகாஷ் கிருஷ்ணன் வெற்றி பெற்றதை சர்வதேச குத்துச் சண்டை சங்கம் திரும்பப் பெற்றதால் இந்தியாவின் பதக்க கனவு பறிபோனது.

ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் 69 கிலோ எடைப் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன், அமெரிக்காவின் எர்ரால் ஸ்பென்சுடன் மோதினார்.

இப்போட்டியில் அமெரிக்க வீரரை 13-11 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி விகாஸ் கிருஷ்ணன் காலிறுதிக்கு தகுதிபெற்றார். 2011-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றவரான விகாஸ், செவாய்க்கிழமை நடக்க உள்ள காலிறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் ஆண்ட்ரே சாம்கொவோவுடன் மோதுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் விகாஷ் கிருஷ்ணன் பெற்ற வெற்றியை திரும்பப் பெறுவதாக சர்வதேச குத்துச் சண்டை சங்கம் அறிவித்திருக்கிறது. மேலும் அமெரிக்காவின் எர்ரால் வென்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் பதக்க வாய்ப்புகளில் ஒன்று பறிபோய்விட்டது.

Story first published: Saturday, August 4, 2012, 10:03 [IST]
Other articles published on Aug 4, 2012
English summary
Indian boxer Vikas Krishnan who was earlier declared winner has crashed out of the games after the decision was reversed in the favour of his American opponent Errol Spence
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+