லண்டன் ஒலிம்பிக் போட்டி: குத்துச்சண்டையில் காலிறுதியில் நுழைந்தார் இந்தியாவின் தேவேந்திரசிங்

காலிறுதிக்கு முந்தைய சுற்று நேற்று நடைபெற்றது. இதில் மங்கோலியாவின் செர்டாம்போவை தேவேந்திர சிங் எதிர்கொண்டார். இருவரும் சமபலத்துடன் மோதினர். போட்டியில் தொடக்கத்தில் தடுமாறிய தேவேந்திரோ சிங், சுதாரித்து ஆடினார். ஆனால் தேவேந்திர சிங்கின் அதிரடியால் கூடுதல் புள்ளிகள் கிடைத்துக் கொண்டே இருந்தது.
இதனால் முதல் சுற்றில் 4-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். அடுத்து செர்டாம்போ கடுமையாகப் போராடியபோதும் தேவேந்திர சிங் 16-11 என்ற கணக்கில் வென்றார். கடந்த ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் செர்டாம்பா என்பது குறிப்பிடத்தக்கது.
செர்டாம்போவை வீழ்த்தியதன் மூலம் காலிறுதிக்கு தேவேந்திர சிங் தகுதி பெற்றுள்ளார். இதையடுத்து காலிறுதியில் அயர்லாந்தின் பேடி பார்னஸை எதிர்கொள்கிறார்.
Story first published: Sunday, August 5, 2012, 9:31 [IST]
Other articles published on Aug 5, 2012


Click it and Unblock the Notifications