உ.கோ. குத்துச்சண்டை-காலிறுதியில் விஜேந்தர்

இத்தாலியன் மிலன் நகரில் உலக கோப்பை குத்துச்சண்டை போட்டிகள் நடக்கிறது. 75 கிகி மிடில்வெயிட் பிரிவில் நடந்த போட்டியில் உலகின் 'நம்பர்-2' வீரரான இந்தியாவின் விஜேந்தர் சிங், கனடாவின் ஸ்டீவ் ரோல்ஸை எதிர்கொண்டார்.
முதல் ரவுண்டில் சிறப்பாக செயல்பட்ட போதும் விஜேந்தர் 0-1 என பின்தங்கினார். இதையடுத்து இரண்டாவது ரவுன்டில் ஆக்ரோஷமாக செயல்பட்டார். இதன் முடிவில் 2-1 என முன்னிலை பெற்றார்.
தொடர்ந்து அசத்திய 23 வயதான விஜேந்தர் இறுதியில் 14-8 என்ற புள்ளி கணக்கில் வென்று, காலிறுதிக்கு தகுதி பெற்றார். இதில் அவர் உக்ரைனின் செர்கி டெரிவ்யான்சென்கோவுடன் மோதுகிறார்.
இதன்மூலம் இந்த உலக கோப்பை தொடரில் காலிறுதிக்கு நுழைந்த இரண்டாவது இந்திய வீரராகிறார். முன்னதாக இந்திய வீரர் தினேஷ் குமார் 81 கிகி பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:30 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications