Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்ட்ராண்ட்ஜா மெமோரியல் குத்துச்சண்டை - நிகாத் ஜரீன், சிவ தாபா காலிறுதிக்கு முன்னேற்றம்

சோபியா : பல்கேரியாவின் தலைநகர் சோபியாவில் நடைபெற்றுவரும் ஸ்ட்ராண்ட்ஜா மெமோரியல் குத்துச்சண்டை தொடரில் 30க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 250 குத்துச்சண்டை வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்தும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஸ்ட்ராண்ட்ஜா மெமோரியல் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்றுள்ள நிலையில் நிகாத் ஜரீன், சிவ தாபா, துர்யோதன் சிங் ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஆயினும் தெற்காசிய போட்டிகளில் தங்கம் வென்ற அங்கித் கதானா உள்ளிட்ட இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் 6 பேர் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறி அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

30 நாடுகளின் 250 வீரர்கள் பங்கேற்பு

30 நாடுகளின் 250 வீரர்கள் பங்கேற்பு

பல்கேரியாவின் சோபியாவில் நடைபெற்றுவரும் ஸ்ட்ராண்ட்ஜா மெமோரியல் குத்துச்சண்டை போட்டியில் உலகெங்கிலும் இருந்து 30 நாடுகளை சேர்ந்த 250 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

காலிறுதிக்கு முன்னேறிய வீரர்கள்

காலிறுதிக்கு முன்னேறிய வீரர்கள்

இந்த குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ள நிலையில், இந்தியாவின் நிகாத் ஜரீன், சிவ தாபா மற்றும் துர்யோதன் சிங் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

கவனத்தை பெற்றுள்ள சிவ தாபா

கவனத்தை பெற்றுள்ள சிவ தாபா

ஆசிய போட்டிகளில் 4 முறை தங்கம் வென்றுள்ள இந்திய குத்துச்சண்டை வீரர் சிவ தாபா, போலந்தின் பாவெல் போலகோவிக்கை 5க்கு 0 என்ற செட் கணக்கில் வெற்றி கொண்டு காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

நிகாத் ஜரீனும் காலிறுதிக்கு முன்னேற்றம்

நிகாத் ஜரீனும் காலிறுதிக்கு முன்னேற்றம்

இதேபோல 51 கிலோ பிரிவு போட்டியில் குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் மற்றும் 69 கிலோ பிரிவில் துர்யோதன் சிங் நேகி ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

முதல் சுற்றிலேயே வெளியேற்றம்

முதல் சுற்றிலேயே வெளியேற்றம்

இதனிடையே, தெற்காசிய போட்டிகளில் தங்கம் வென்ற அங்கித் கதானா, வெள்ளி வென்ற தீபக் குமார், நரேந்தர் மற்றும் நவீன்குமார் ஆகிய வீரர்களும் நுபூர் மற்றும் லலிதா ஆகிய வீராங்கனைகளும் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்துள்ளனர்.

Story first published: Thursday, January 23, 2020, 16:50 [IST]
Other articles published on Jan 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+