'தங்க மங்கை' மேரி கோமுக்கு ட்விட்டரில் குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: தென் கொரியாவில் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவின் மேரி கோம் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதையடுத்து அவருக்கு ட்விட்டரில் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடந்து வரும் ஆசிய விளைாட்டுப் போட்டியில் மகளிருக்கான குத்துச்சண்டை பிரிவின் இறுதிப் போட்டியில் கஜகஸ்தானின் ஜைனா ஷெகர்பெகோவாவை வீழ்த்தி இந்தியாவின் மேரி கோம் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். ஆசிய விளையாட்டில் பெண்கள் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள முதல் தங்கம் இது.
இந்நிலையில் மேரி கோமுக்கு ட்விட்டரில் வாழ்த்துக்கள் குவிகின்றது.

பிரியங்கா சோப்ரா
இது தான் பெண் சக்தி! மேரி கோம் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததுடன் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார் என நடிகை பிரியங்கா சோப்ரா ட்வீட் செய்துள்ளார்.

கிரண் பேடி
வாழ்த்துக்கள் மேரி! மேரி கோம் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

கெஜ்ரிவால்
வாழ்த்துக்கள் மேரி கோம். உங்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.

சத்ருகன் சின்ஹா
ஆசிய விளையாட்டில் சிறப்பாக செயல்பட்ட மேரி கோமுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என நடிகர் சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.

குஷ்பு
மேரி கோம் சல்யூட் மற்றும் மரியாதை என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

டிரெண்ட்
கோல்ட் ஃபார் மேரி கோம் என்பது ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications